உடையார்கட்டு மூங்கிலாறு மருத்துவமனை 6 வது கெமுணு ஹேவா படையினரால் சுத்தம்

27th June 2023

68 வது காலாட் படைப்பிரிவின் 681 வது காலாட் பிரிகேடின் 6 வது கெமுணு ஹேவா படையணி படையினர் உடையார்கட்டு மூங்கிலாறு வைத்தியசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தும் ‘சிரமதான’ நிகழ்வினை சனிக்கிழமை (24) காலை முன்னெடுத்தனர்.

68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 6 வது கெமுணு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எல்டப்ளியூ திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில் ஒரு அதிகாரி உட்பட 10 சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.