653 காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பில் மடு பகுதியின் 235க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்

18th June 2023

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது காலாட் படைப்பிரிவின் 653 காலாட் பிரிகேட் படையினர் தமது கட்டளைப் பிரதேச மாணவர்களுக்கு ரூபா 500,000.00 பெறுமதியான பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் சமூகத் திட்டமொன்றை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 15 மற்றும் 16) பிரிகேட் ஏற்பாடு செய்திருந்தனர்.

653 காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎன்சி சேரசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பு மூலம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளர் ஒருவரினால் இதற்கான அனுசரணை வழங்கப்பட்டது.

இதன்படி, வியாழன் (15) அன்று பெரியமடு (கிழக்கு) ஆரம்பப் பாடசாலை மற்றும் கிரிசுட்டான் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றின் 51 மாணவர்களுக்கு அந்த பாடசாலை உபகரணங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு சென்று படையினர் விநியோகித்தனர்.

மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பூமலந்தன் ஆரம்பப் பாடசாலை, பெரியபாண்டிவிரிச்சான் மத்திய கல்லூரி மற்றும் பெரியபாண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 186 மாணவர்களும் வெள்ளிக்கிழமை (16) அந்தந்த பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.

653 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎன்சி சேரசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, 653 வது பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜிஏடிபீ கனேஹியாராச்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.