முதலாம் படையின் தளபதியாக மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பதவியேற்பு

13th July 2024

கிளிநொச்சியில் உள்ள முதலாம் படையின் 5 வது தளபதியாக மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 11 ஜூலை 2024 அன்று பதவியேற்றார்.

முதலாம் படை தலைமையக பிரதான நுழைவாயிலில் 2 வது கமாண்டோ படையணி படையினரால் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து 53 வது காலாட் படைப்பிரிவு, 58 வது காலாட் படைப்பிரிவு,ஏயர் மொபையில் பிரிகேட், கமாண்டோ பிரிகேட் மற்றும் விஷேட படையணி பிரிகேடினால் கௌரவிப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர், மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய தளபதி உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் தளபதி , தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடும் முன் அனைத்து நிலையினருடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.

தளபதி தனது உரையின் போது, இராணுவத்தில் கடமைகளை ஆற்றும் போது ஒழுக்கத்தைப் பேணுவதுடன் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தனது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு அறிவூட்டினார்.

அதிகாரவாணையற்ற அதிகாரி I (ஓய்வு) யு.ஜி.ஜயவீரவும் இந்த நிகழ்வில் அழைப்பாளராக கலந்து கொண்டார். மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் இன் பயிற்றுவிப்பாளராக இருந்து, அவர் அடிப்படை கமாண்டோ பாடநெறியை மேற்கொண்டார். மேலும், அதிகாரவாணையற்ற அதிகாரி I (ஓய்வு) யு.ஜி.ஜயவீர, 1993 ஆம் ஆண்டில் 2 வது கமாண்டோ படையணியின் தொடக்கத்திற்குப் பிறகு, மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் குழுத் தளபதி மற்றும் கட்டளை அதிகாரியாக கடமையற்றிய காலத்தின் போது அணி சார்ஜன் முதல் அணி சார்ஜன் மேஜர் வரை கடமைகளை ஆற்றியுள்ளார். இந்த இரு போர் வீரர்களும் சுமன, எடிபல, லீப் பர்வேர்ட், ரிவிரேச, சத்ஜய மற்றும் ஜயசிகுரு நடவடிக்கைகளுக்கு ஒன்றாக பங்களித்துள்ளனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.