வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 56 வது காலாட் படைப் பிரிவுக்கு விஜயம்
11th July 2024
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 56 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கீழ் இயங்கும் பிரிகேட்களுக்கு 08 ஜூலை 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, 56 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மற்றும் பணி நிலை அதிகாரிகளால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி வரவேற்கப்பட்டார்.
படைப்பிரிவின் தளபதியின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் பயிற்சி மற்றும் ஒழுக்கத்தின் மூலம் இராணுவத்தின் தரத்தை நிலைநிறுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 56 வது காலாட் படைப்பிரிவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுகூரும் வகையில், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
அதன்பின், அலுவலக வளாகம் முன், மாங்கன்று நட்டுவைத்ததுடன், குழு படம் எடுத்துக் கொண்டார்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி இறுதியாக 561, 562, மற்றும் 563 வது காலாட் பிரிகேட்டுகளுக்கு விஜயம் செய்ததுடன், பிரிகேட் தளபதிகள் ஒவ்வொரு பிரிகேட் தலைமையகத்தின் கடமைகளை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரி மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.