141 வது காலாட் பிரிகேட்டினரின் 17 வது ஆண்டு நிறைவு விழா
5th July 2024
141 வது காலாட் பிரிகேட்டின் 17வது ஆண்டு நிறைவு விழா 141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் நிகழ்வுகளுடன் னொண்டாடப்பட்டது. அதற்கமைய 2024 ஜூன் 29 அன்று நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து தான நிகழ்வு மற்றும் 01 ஜூலை 2024 அன்று புதுப்பிக்கப்பட்ட பாதுகாவலர் அறையின் திறப்பு விழா என்பனவும் இடம்பெற்றன.
பிரிகேட் பணியாளர்கள் 02 ஜூலை 2024 அன்று வருகை தந்த கேணல் ஆர்.ஆர். த எஸ். தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களை மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர், பிரதான நுழைவாயிலில் பாதுகாவர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், முகாம் வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது. பின்னர், அவர் இராணுவ வீரர்களிடையே ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உரையாற்றினார்.