52 வது காலாட் படைப்பிரிவு படையினரின் வெசாக் தின கொண்டாட்டம்
28th May 2024
2024 மே 23 முதல் 26 வரை மிரிசுவில் மற்றும் சமித்தி சுமண விகாரை, நாவட்குழி ஆகிய இடங்களில் வெசாக் திருவிழாவை முன்னிட்டு 52 வது காலாட் படைபிரிவின் படையினர் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.
அப்பகுதிகள் வண்ணமயமான வெசாக் கூடுகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பக்தி பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. திரளான பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் அன்னதானம் வழங்களும் இடம்பெற்றது.
இதேவேளை, 522 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ், வெசாக் கொண்டாட்டங்களை ஒட்டி, கடைக்காடு பகுதியில் குளிர்பான தான நிகழ்வு ஒன்றை 522 வது காலாட் பிரிகேட் படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.. இந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க பொதுமக்களின் பங்களிப்பும் காணப்பட்டது.
மேலும் 23 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் 24 மே 2024 அன்று முகமாலையில் பனிஸ் மற்றும் குளிர்பான தான நிகழ்வினை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டர்.