யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின வெசாக் தினம் -2024
26th May 2024
2024 மே 23 அன்று, மத செழிப்பைக் குறிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு வெசாக் தின நிகழ்வுகளை யாழ்.பாதுகாப்புப் படையினர் கொண்டாடினர். யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையில், புனித கலசமும் 'புனித தாதுகள்' மற்றும் மாணிக்கம் விகாரையில் ஸ்தாபித்தலுடன் 2024ம் வருட வெசாக் நிகழ்வுகள் காலை ஆரம்பமானது. திஸ்ஸ விகாரையில் வைக்கப்படுவதற்கு முன்னர், புனித கலசமும் 'புனித தாதுகள்' மற்றும் மாணிக்கம் 13 மே 2024 முதல் இராணுவ படையினரின் வணக்கத்திற்காக பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
மாலையில், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு குழுவும் இராணுவத்தின் இரு அணிகள் என ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் “பக்தி பாடல்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியில், ஐந்து குழுக்களும் யாழ்ப்பாணம் நாக விகாரையில் ஒன்றுகூடி, இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கு முப்படையினரும் பொலிஸாரும் இணைந்த ‘பக்தி பாடல்’ அமர்வை நடத்தினர். பெண் சிப்பாய்கள் உட்பட படையினர் புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல், பரிநிர்வாணத்தை குறிக்கும் பக்தி பாடல்களை பாடினர்.
யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, வரலாற்றில் முதன்முறையாக முப்படைகளும் பொலிஸாரும் இணைந்த வெசாக் விழாவினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாக விகாரை வளாகத்தில் வண்ண வெசாக் கூடுகள் மற்றும் விளக்குகள் இராணுவத்தினரின் போட்டி அடிப்படையிலும் யாழ் நகரையும் அதன் புறநகர்ப் பகுதிகளை அலங்கரிப்பதற்கு 'வெசாக் கூடுகள்' மேலதிகமாக படையினரால் நிர்மாணிக்கப்ட்டிருந்தன.
நாக விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தை தவிர, பல இடங்களில் வெசாக் தான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீஎஸ்எம் சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தலைவர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியுடன் இணைந்து ‘வெசாக் தான நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் பக்தி பாடல் நிகழ்வினை கண்டுகளித்தனர். குடாநாட்டில் மத மற்றும் இன நல்லிணக்கத்தை அடையாளப்படுத்தும் 'பக்தி பாடல்களை காணவும் அனைத்து 'தான' இடங்களிலும் பெருமளவான கூட்டம் காணப்பட்டது.
வெசாக் பண்டிகையை நினைவுகூரும் வகையில், 521 வது காலாட் பிரிகேடினர் பருத்தித்துறையில் உள்ள பிரிகேட் தலைமையகத்திற்கு முன்பாக ரொட்டி மற்றும் தேநீர் தான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் பொதுமக்களுக்கு ரொட்டி மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. பிரிகேடியர் எம்எச்ஆர் பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 521 வது காலாட் பிரிகேட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, 51 வது மற்றும் 52 வது படைப்பிரிவின் தளபதிகள், வடக்கு கடற்படைக் தளபதி, பலாலி விமான படைத் தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வெசாக் பண்டிகையை பிரமாண்டமாக நடைப்பெறுவதற்கு தமது பூரண ஆதரவை வழங்கினர்.