19 வது தேசிய பாதுகாவலர் படையணியினால் விதுலிபுர முதியோர் இல்லத்திற்கு நன்கொடை
4th April 2024
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.எஸ்.ஆர் பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2024 மார்ச் 31 ஆம் திகதி நோர்டன் விதுலிபுர சந்திரா விஜேரத்ன முதியோர் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர்.
முதியோர்களுக்கான வசதிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முதியோர் இல்லத்திற்கு மின்சார நீர் சூடாக்கி இயந்திரம் வழங்கப்பட்டதுடன், முதியோர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.