காலி, போத்தல பிரதேசத்தில் ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு
28th March 2024
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 61 வது காலாட் படைப்பிரிவு, பொறியியல் சேவைப் படையணி மற்றும் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் காலி, போத்தல பிரதேசத்தில் வசிக்கும் ஏழை குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடு நிர்மாணிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
2024 மார்ச் மாதம் 20 ம் திகதி வீடு திறப்பு விழா இடம்பெற்றதுடன் 61 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்எல்எஸ் தயாவன்ச அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வின் போது, பிரதி தளபதி மற்றும் போத்தல போபே பிரதேச செயலக செயலாளர் ஆகியோரினால் தென்னம் பிள்ளைகள் நடப்பட்டன.
போத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.