1வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியினால் மகுருமஸ்விலவின் 150 மாணவர்களுக்கு நன்கொடை

22nd March 2024

1வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியினால் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் வள்ளலாவிட்ட மகுருமஸ்வில வித்தியாலயத்தின் 150 மாணவர்களுக்கு 2024 மார்ச் 13 அன்று பாடசாலைப் பைகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

படையினரின் ஒருங்கிணைப்பில் உமேஷ் குணசேகர மற்றும் திரு.பிரசாத் லொகுபாலசூரிய ஆகியோர், ‘அத ஹித’ நன்கொடை நிறுவனத்தின் இணைப்பாளர்களுடன் இணைந்து இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்கினர்.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 612 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.