552 வது காலாட் பிரிகேடினரால் பூநகரினில் 200 மாணவர்களுக்கு பாடசாலை உதவி பொருட்கள்
2nd February 2024
கொழும்பு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஆதரவுடன் 552 வது காலாட் பிரிகேடினரால் நல்லூர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பூநகரின் செல்லியத்தீவு தமிழ் கலவன் பாடசாலைகளில் உள்ள 200 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உதவி பொருட்களை சனிக்கிழமை (ஜனவரி 20) வழங்கப்பட்டது.
நல்லூர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் பயிற்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள், பாடசாலை பை, ஒரு ஜோடி காலணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வித் தேவைகளை ஆதரிப்பதை இது நோக்கமாக கொண்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 552 வது காலாட் பிரிகேட் தளபதி கலந்து கொண்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கொழும்பு ஸ்டாண்டர்ட் சார்ட் வங்கியின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.