593 வது காலாட் பிரிகேட் படையினரால் முல்லைத்தீவு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை

3rd December 2023

68 வது காலாட் படைப்பிரிவின் 593 வது காலாட் பிரிகேட் படையினர் புதுக்குடியிருப்பில் பொது மக்களின் நலனுக்காக நவம்பர் 29 ஆம் திகதி 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி முகாம் வளாகத்தில் கண் மருத்துவ சிகிச்சையினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நடமாடும் கண் மருத்துவ சிகிச்சையில் கலந்து கொண்ட 242 பேரில் 27 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் எதிர்காலத்தில் வவுனியா போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வார்கள். மருத்துவ சிகிச்சையின் போது அடையாளம் காணப்பட்ட 188 பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இராணுவ ஒருங்கிணைப்பு மூலம் எதிர்காலத்தில் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

'மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சிக்கான உதவி' அமைப்பின் செயலாளர், டாக்டர். வி.சவேஸ்வரன், மாஞ்சோலை மருத்துவமனையில் டாக்டர் பாத்திமாநிஷ்னா (கண் அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் அவர்களின் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ முகாமை நடத்துவதற்கு உதவினர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசிபீஎஸ்சி மற்றும் 593 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்வீஏசோமவீர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர் இச் சமூகம் சார்ந்த நலத்திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கினர்.