மத்திய படையினரால் சிவில் ஊழியர்களுக்கு உதவி

9th November 2023

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினரால் நிதிச் சிக்கல்கள் மற்றும் பாதகமான காலநிலைக் தாக்கத்திற்கு உதவும் நோக்கத்துடன் தங்கள் சொந்த நிதியில் உலர் உணவுப் பொதிகளை வழங்கினர். இப்பொதிகள் தலா ரூ. 6,000/= பெறுமதியாகும். இப்பொதிகள் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 10 சிவில் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அதற்கமைய மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சிவில் ஊழியர்களை வரவழைத்து நிவாரணப் பொதிகளை புதன்கிழமை (நவம்பர் 8) அன்று வழங்கினார்.