கல்முனை மாணவர்களுக்கு இலவச காலணி

5th October 2023

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (ஒக்டோபர் 2) அம்/கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவச பாடசாலைக் காலணிகளைப் பெற்றுக்கொண்டதுடன், மதிய உணவையும் உண்டு மகிழ்ந்தனர்.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டதுடன், 18 வது விஜயபாகு காலாட் படையணியின் அனைத்து நிலையினரும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்துடன், 18 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேயூஆர் களுஆராச்சி ஆர்எஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

18 வது விஜயபாகு காலாட் படையணியின் கலிப்சோ இசைக்குழுவினர் நிகழ்ச்சிக்கு இசை வழங்கி மாணவர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்வித்ததுடன், படையினரால் வழங்கப்பட்ட இலவச உணவை ஆசிரியர்களும் உண்டு மகிழ்ந்தனர்.