இரத்த தானம் செய்த இராணுவத்தினருக்கு யாழ். இரத்த மாற்று நிலையம் பாராட்டு
16th July 2023
மனிதாபிமானம் மற்றும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு யாழ். குடாநாட்டை தளமாகக் கொண்டுள்ள 1733 இராணுவ உறுப்பினர்கள் 2021 ஜூலை 29 முதல் 2023 ஏப்ரல் 21 வரை யாழ். போதனா வைத்தியசாலை பிராந்திய இரத்த மாற்று நிலையத்திற்கு தானாக முன்வந்து இரத்த தானம் செய்துள்ளதாக யாழ். இரத்த மாற்று நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘உலக இரத்த தான தினத்தை’ முன்னிட்டு அண்மையில் யாழ். தாதியர் கல்லூரியில் நடைபெற்ற விழாவின் போது யாழ். போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் தமது வைத்தியசாலையிலும், புறப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் உயிரரைகாக்கும் வகையில் இரத்தத்தை தானமாக வழங்கிய அனைத்து பாதுகாப்புப் படை உறுப்பினர்களையும் யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த மாற்று நிலையம் பாராட்டியது. இந்த விழாவில் 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் (வைத்தியர்) ஏஏசிசி குமார அவர்கள் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை பெற்றுக் கொண்டார்
வடமாகாண ஆளுநர் திருமதி. பீஎஸ்எம் சார்ள்ஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், ‘உலக இரத்ததான தின’ நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலாளர் திரு. ஏ சிவபாலசுந்தரன் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்தியர் டி.பேரானந்தராஜா, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி, யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த மாற்று நிலையத்தின் பிராந்திய இரத்த நிலையத்தின் ஆலோசகர் வைத்தியர் ஏ.என்.ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை யாழ். செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது இராணுவத்தின் சார்பாக 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் (வைத்தியர்) ஏஏசிசி குமார மற்றும் கொடையாளர்கள் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்ச்சியின் புள்ளிவிபரத்தின் படி பலாலியில் 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த 254 இராணுவ வீரர்கள், அல்லரை 4 வது விஜபாகு காலாட் படையணியின் 64 படையினர், இயக்கச்சி 552 வது பிரிகேட் தலைமையகத்தின் 256 படையினர், 20 வது விஜபாகு காலாட் படையணியின் 64 பேர், கொடிகாமம் 15 வது கஜபா படையணியின் 159 படையினர், பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 94 பேர், காங்கேசன்துறை 10 வது இராணுவ பொறியியல் படையணியின் 102 வீரர்கள், முகமாலை கெமுணு ஹேவா படையணியின் 118 பேர், , அராலி 17 வது கெமுணு ஹேவா படையணியின் 68 இராணுவ உறுப்பினர்கள், அல்லரை 7 வது விஜபாகு காலாட் படையணியின் 97 வீரர்கள், கடைக்காடு 55 வது படைப்பிரிவின் தலைமையகத்தைச் சேர்ந்த 199 இராணுவ வீரர்கள், கோப்பாய் 15 வது இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணியில் 110 இராணுவ வீரர்கள், இயக்கச்சி 12 வது விஜபாகு காலாட் படையணியின் 68 இராணுவ வீரர்கள், மற்றும் 80 இராணுவ உறுப்பினர்கள் காங்கேசன் துறை திஸ்ஸ விஹாரையில் மேற்கூறிய காலப்பகுதியில் யாழ். பொது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் இரத்தத்தை வழங்கியுள்ளனர்.
இத் திட்டம் 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையினால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் (வைத்தியர்) ஏஏசிசி குமார ஆகியோர் யாழ். இரத்த மாற்று மையத்துடன் இத்திட்டத்திற்காக நேரடியாக தொடர்பு கொண்டார்.