இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய தளபதி பதவி ஏற்பு

3rd January 2023

கஜபா படையணியை சேர்ந்த பிரிகேடியர் புத்திக பெரேரா அவர்கள் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் புதிய தளபதியாக புதன்கிழமை (டிசம்பர் 28) மத சடங்குகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை இராணுவ கல்வியிற் கல்லூரியின் பிரதி தளபதி பிரிகேடியர் சுமல் ஹேமரத்ன அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பின்னர், இராணுவப் பயிற்சிப் பிரிவின் பயிற்சிக் குழுவின் தலைவர் லெப்டினன் கேணல் எல்பி அத்துகோரல தலைமையில் பிரதம அதிதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி மகா சங்கத்தினரின் ‘பிரித்’ பாராயாணத்துக்கு மத்தியில் அதிகாரபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமை பொறுப்பேற்றார்.

வழமை போன்று, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய தளபதி சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றியதுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொடவிற்கு 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டதை அடுத்து பிரிகேடியர் புத்திக பெரேரா அவர்கள் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.