12வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மொனராகலையில் 475 மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

9th December 2022

மொனராகலை தெட்டகமுவ ஆரம்ப பாடசாலையில் உள்ள 475 மாணவர்களின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கிராமசேவை அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிகாரிகளால் படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையுடன் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் படையினர் 475 மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்கி வைத்தனர்.

‘சித்மின’ வரையறுக்கப்பட்ட தனியார் கட்டிட நிறுவனத்தின் அனுசரணையில் டிசம்பர் 6 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் மேற்படி விநியோகத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மிஹிந்து பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 3 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினர் , 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர்.

12 வது படைப்பிரிவின் தளபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், 475 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிபர், அனுசரணை வழங்கும் நிறுவனத்தின் 12 பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரும் கலந்துகொண்டனர்.