மேஜர் ஜெனரல் (ஓய்வு) வை பாலரத்ன ராஜா காலமானார்
31st May 2022
பல வருடங்களுக்கு முன்னர் இராணுவ பதவி நிலைப் பிரதானியாக கடமையாற்றிய இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) Y பாலரத்ன ராஜா தனது 83 வது வயதில் சுகவீனம் காரணமாக வியாழக்கிழமை (29) காலமானார்.
அவரது பூதவுடல் பொரளையில் ஜெயரத்ன மலர்சாலையின் ‘தி ரெஸ்பெக்ட்’ பார்லரில் வைக்கப்பட்டுள்ளது. பூரண இராணுவ மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (2) மாலை 4.00 மணிக்கு கொழும்பு பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
தனது இராணுவப் பணியின் போது, 24 வது படைப்பிரிவின் தளபதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, முதலாவது கவச வாகன பிரிகேட் தளபதி, 21 வது பிரிகேட் தளபதி, முதலாவது படைப்பிரிவு தளபதி, இலங்கை கவசப் படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.