நாட்டின் உள்ள பாதுகாப்பு படையினரால் வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தங்களின் ஒத்துழைப்பு வழங்கினர்

21st May 2022

'வெசாக்' தினத்தை முன்னிட்டு (தானம்) என்ற பௌத்த தர்மத்தை கடைப்பிடித்து, வெசாக் பௌர்ணமி தினத்தன்று (15) 65 வது படைப்பிரிவின் 651, 652 மற்றும் 653 வது பிரிகேட் படையினர் மருத்துவமனை நோயாளிகளுக்கும் மற்றும் கிராமங்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் விசேட மதிய உணவுப் பொதிகளை வழங்கினர்.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி மற்றும் அந்தந்தப் படைத் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி, 19 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி, 24 வது கஜபா படையணி மற்றும் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை படையணியின் படையினர் இந்த விநியோகத் திட்டத்தில் கலந்து கொண்டதுடன் இந்த திட்டத்தில் 340 மதிய உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 20 வது இலங்கை சிங்க படையணியின் சிப்பாய்கள் மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களின் மேற்பார்வையின் கீழ் கதிர்காம பக்தர்களுக்காக ஹம்பாந்தோட்டை கோதமிகமவில் இலவச அன்னதானம் வழங்கினர். இதற்கிடையில் சிங்கப்பூரின் Tan NgakBuay மற்றும் KeeMeng Lang Foundation Limited ஆகியோரின் அனுசரணையுடன், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது படைப்பிரிவின் 541, 542 மற்றும் 543 வது பிரிகேட் படையினர் மன்னார் மாவட்டத்திலுள்ள வரிய குடும்பங்களுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்கினர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலுடன், 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களால் 54 வது படைப்பிரிவின் கீழுள்ள அனைத்துப் பிரிகேட் தளபதிகளின் முழுமையான ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாத்தோட்ட ராஜமஹா விஹாரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்டான்லி டி மெல் அவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து சமய மதகுருமார்கள், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சமய மதத் தலைவர்கள், 541 வது பிரிகேட் தளபதி, தொண்டர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் சிவில் அலுவலக அதிகாரி, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் 542 மற்றும் 543 வது பிரிகேட் சிப்பாய்கள் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர். மேலும் ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையின் வண. தலகல சுமணரதன தேரரின் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் படையினர் இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் 18 வது விஜயபாகு காலாட்படை படையணியினர் மே 16 ஆம் திகதி கல்முனை, காரைதீவு பிரதேசத்தில் வசிக்கும் 25 வரிய குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர். நல்லுல்லம் கொண்ட அதிகாரிகள் மற்றும் 18 வது விஜயபாகு காலாட்படை படையணியின் சிப்பாய்கள் ஒன்றிணைந்து அவர்களின் வரிய தன்மையை கருத்தில் கொண்டு அந்த அத்தியாவசி பொருட்களுக்கான அனுசரணையை வழங்கினர்.

பிரதேசத்தின் அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, விநியோகத் திட்டம் கார்த்திகை பல்பணி மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் 18 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.ஆர்.கே.டி.சிறீசேன, 241 வது பிரிகேட் படையணியின் சிவில் விவகார அதிகாரி மேஜர் கே.எஸ்.ஹரிசேன, அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.