புத்தாண்டை முன்னிட்டு, தளபதியவர்கள் ரணவிரு சங்கங்களின் மாவட்ட பிரதிநிதிகளை சந்திப்பு

13th April 2022

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரணவிரு சங்கங்களின் மாவட்ட பிரதிநிதிகளுடன் இன்று (11) முற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், பிரதம அதிதியாக இந்தக் சங்கங்களின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பங்களிப்புடன் ஆரம்பமானது.

ஓய்வுபெற்ற, மருத்துவ ரீதியாக வெளியேற்றப்பட்ட, மாற்றுத்திறனாளிகள் மற்றும் உயிர்நீத்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் சமூகப் பொருளாதார நலனை மேலும் உறுதி செய்யும் முகமாகவும் படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் இராணுவத் தலைமையகத்தில் உள்ள நலன்புரி பணிப்பகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ஏதேனும் சிக்கல்கள் காணப்படும் இடத்தில் அதனை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைத் ஆராயும் முகமாகவும் இராணுவத் தளபதியின் கருத்தின் அடிப்படையில் அந்த ரணவிரு சங்கங்கள் 2021 பெப்ரவரி 16 ஆம் திகதி மட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், நிறுவப்பட்டதில் இருந்து கடந்த காலங்களில் பாதுகாப்புப் படைத் தலைமையக மட்டத்தில் உள்ள அந்தந்த தளபதிகள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அந்த மாவட்டக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர்.

இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்த ரணவிரு சங்கங்களின் அங்கத்தவர்களுக்கும், தாய்நாட்டின் சிறந்த நலன்களுக்காக கடந்த காலத்தில் அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புச் சேவைகளைப் பாராட்டும் அடையாளமாக சிறப்புப் புத்தாண்டு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அன்றைய பிரதம விருந்தினர் அன்றைய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து அந்த பரிசுப் பொதிகளில் முதல் தொகுதியை கையளித்தார். இதன் போது இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர் பிரிகேடியர் மங்கள மாயாதுன்ன மற்றும் இன்னும் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கேகாலை, களுத்துறை, அநுராதபுரம், மாத்தறை, கண்டி, மொனராகலை, காலி, நுவரெலியா, அம்பாறை, பொலன்னறுவை, கொழும்பு, ரத்தன்புர, மாத்தளை, வவுனியா, கம்பஹா, பதுளை, அம்பாந்தோட்டை, திருகோணமலை, முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, மற்றும் குருநாகல் ஆகிய 22 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாக உறுப்பினர்கள் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டார்.

நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம் இசைக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த போர்வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்விடத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விகும் லியனகே மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

இராணுவத் தளபதி தனது உரையில், குறித்த கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் காட்டியதுடன், ஓய்வுபெற்றவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் உயிர் நீத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் தொடர்பாக ஆராயுமாறு அனைத்து படைத் தலைமையகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.