மினுஸ்மாவில் ஜ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி இலங்கை இராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு பாராட்டு
9th March 2022
"தெளிவாக, உங்கள் அமைதிகாக்கும் கொம்பட் குழு மிக சிறப்பாக சேவையாற்றி தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது. மினுசுமா ஜ.நா அமைகாக்கும் பதக்க அணிவகுப்பில் பங்கேற்ற இலங்கையின் 3 வது அமைதிகாக்கும் குழுவின் அனைத்து இலங்கை வீரர்களையும் நான் வாழ்த்துகிறேன்,” என்று ஐ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ஈ.ஐ. காசிம் வேன் அவர்கள் மாலியில் பெப்ரவரி 11 ஆம் திகதி நடைபெற்ற பதக்கம் வழங்கும் அணிவகுப்பில் நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டினார். மேலும் அவர்களின் பணி முடிந்தவுடன் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்கப்படுகின்றது.
“கடந்த ஆண்டு நீங்கள் அனுப்பப்பட்டதிலிருந்து, நீங்கள் ஒன்பது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு பணியை செய்ய மறுத்ததில்லை மற்றும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதை காட்டுகிறீர்கள். கடந்த ஆண்டு உங்களால் முன்னெடுக்கப்பட்ட நார்தர்ன் கேட் - டெஸ்ஸாலிட் மற்றும் அல்ஜீரியாவின் எல்லைக்கு இடையேயான உளவுப் பணியினை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் அறிந்தபடி இந்த நடவடிக்கையானது மினுஸ்மாவின் விநியோக வழிகளைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் எங்களுடைய அமைதிகாக்கும் உறுப்பினர்களின் பாதுகாப்பினை அதிகரித்தல் உள்ளிட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகும். உங்களில் சிலருக்குத் தெரியும், நாங்கள் அங்கீகரிக்கப்படாத பிரதேசத்திற்குள் நுழைந்தபோது நான் இந்த நடவடிக்கையை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்தேன், மேலும் நீங்கள் இந்த பணியை நடத்திய துணிச்சலுக்கும் தொழில் நிபுணத்துவத்திற்கும் நன்றி," என்று அவர் மேலும் கூறினார்.
"ஒரு அமைதி காக்கும் வீரருக்கு, அமைதிக்காக ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் பதக்கம் வழங்கப்படுவது இறுதி கௌரவமாககும். இன்று இந்த நிகழ்வில் நான் பிரசன்னமாகியிருப்பது எனக்கு கிடைத்த பாக்கியமும் அதிர்ஷ்டமும் ஆகும். சக ஊழியர்களே, நீங்கள் இங்கு மாலியில் கிட்டத்தட்ட 9 மாதங்கள் சேவையை முடித்திருக்கிறீர்கள். இன்னும் சில மாதங்களில், உங்கள் பெருமைமிக்க குடும்பங்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பாதற்காக வீடு திரும்புவீர்கள்," என்று அவர் கூறினார்.
“நாங்கள் இங்கு கூடும் போது, இங்கு தங்கள் உயிரை இழந்த உங்கள் சக ஊழியர்களின் நினைவையும், காயமடைந்தவர்களின் நினைவையும் என்னால் நினைவுபடுத்தாமல் இருக்கமுடியாது. இந்த பதக்க அணிவகுப்பு சில வாரங்களுக்கு முன்னர் மாலி நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தின் மூன்று சிரேஷ்ட ஜெனரல்கள் முன்னிலையில் நடைபெறவிருந்ததை நான் அறிவேன். மேலும் சில எதிர்பாராத காரணங்களால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இருப்பினும், நான் உங்கள் தலைமையை பமாகோவில் சந்தித்தேன், மேலும் உங்கள் நிறுவனத்தின் தொழில்முறை மற்றும் நீங்கள் செய்த விதிவிலக்கான பணிகளுக்காக நான் பாராட்டினேன். நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றிய சிறந்த தந்திரோபாயங்கள் மற்றும் மனநிலைக்கு உங்கள் படைத் தளபதியும் தனது உயர்வான மதிப்பைத் தெரிவித்தார்.
“வழங்கள் வாகனத் தொடரணிகளை அழைத்துச் செல்வது, எங்கள் முக்கிய விநியோக வழிகளில் சுதந்திரமாகச் செல்வதை உறுதி செய்தல், குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்குத் துறைகளின் சரக்கு சுயாட்சியை உறுதி செய்தல் ஆகியவற்றில் பொறுப்பேற்றுள்ள போர் பயிற்சி நிறுவனங்களில் நீங்களும் ஒருவர். இது எளிதான காரியம் அல்ல. நிலப்பரப்பு கடினமானது, மற்றும் பாதுகாப்பற்றது. மினுஸ்மாவின் கீழ் இலங்கையின் அமைதி காக்கும் படையினர் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் ஆற்றி பல வெற்றிகளை பெற்று மினுஸ்மா தலைமைத்துவத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதாக நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் மற்றும் உங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்கு இந்த தலைமை நிறுவனம் எப்போதும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். உங்கள் பணியின் முடிவில் நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன், மேலும் உங்கள் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்”, என்று கூறினார்.