இந்தியா-இலங்கை ஒத்துழைப்பின் மூலம் ஜெய்ப்பூரில் இருந்து 430 செயற்கை கால்கள் வழங்கி வைப்பு
9th March 2022
விசேட தேவையுடைய போர் வீரர்கள், பொலிஸ் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்கருதி இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதி மூலம் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் எற்பாடு செய்யப்பட்ட 35 நாட்கள் நீடித்த 'செயற்கை கால் பொருத்தும் முகாம்’ இன் நிறைவு நிகழ்வு ராகம ரணவிரு செவனவில் இன்று (07) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு), ரணவிரு சேவை அதிகாரசபை துணைத் தலைவர் திருமதி சோனியா கோட்டேகொட, இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட், இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதிகுழு உறுப்பினர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்புவிடுக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதி, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிமேதகு கோபால் பாக்லே அவர்களின் அனுசரணையின் மூலம் புகழ்பெற்ற 'ஜெய்பூர் லிம்ப்ஸ்' உலகின் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராக அதன் 'செயற்கை மூட்டு பொருத்தும் முகாமை 35 நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் மற்றும் இலங்கையின் 74வது சுதந்திர தினம் (4 பெப்ரவரி) ஆகிய இரண்டையும் ஒட்டி ரணவிரு சேவை அதிகாரசபை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இவ் முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இலங்கையின் ஊனமுற்ற போர்வீரர்கள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்களும் பயனடைந்தனர்.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி இத்திட்டம் அமோக வெற்றியடைவதற்கு முக்கிய பங்காற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) உரையாற்றிய நிறைவு விழாவில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சிறந்த முறையில் உதவியமைக்காக மற்றும் ரணவிரு சேவை அதிகாரசபை ஊழியர்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் தனது சிறப்புரையில், உலகெங்கிலும் உள்ள ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதியின் பங்கைப் பாராட்டினார், மேலும் இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட் தனது குறுகிய உரையில், இரு நாடுகளின் பரஸ்பர திட்டங்களையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவினையும் நினைவு கூர்ந்தார். ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதியின் அதிகாரிகள் தங்கள் சுருக்கமான உரையின்போது திட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதன்படி, 261 இராணுவ வீரர்கள், 4 கடற்படையினர், 19 விமானப்படை வீரர்கள், 73 பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினர், 43 ஆயுதப்படை மற்றும் பொலிஸ் உறவினர்கள், மற்றும் 30 சமூக சேவைகள் திணைக்களத்தின் பணியாளர்கள் ஆகியோர் செயற்கை கால்களை பெற்ற பயனாளிகளில் அடங்குவர். ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதியின் அதிகாரிகள் இலங்கையில் தங்கியிருந்த 35 நாட்களின் போது, மேற்கூறிய பிரிவுகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக 430 செயற்கை உடல் உறுப்புகளை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றனர்.
பாராட்டு விழாவின் முடிவில், ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதியின் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிதோடு இந்த உன்னத சேவை நோக்கத்திற்காக அவர்கள் இங்கு தங்கியிருந்த காலத்தில் செய்த சேவைகளைப் பாராட்டினார்.