குதிரைப்படை வீரர்களுடன், இலங்கை இராணுவ கவச வாகன படையணி செயலமர்வு - 2022
25th February 2022
இலங்கை கவசப் படையணி செயலமர்வு 2022 க்கான முதல் செயலமர்வில் குதிரைப்படை அதிகாரிகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் திறமைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தனர். இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கு மூலோபாய திட்டம் 2020-2025' க்கமைவாக 'அறிவின் மூலம் சிறப்பானது' என்ற தொனிப் பொருளில், பெப்ரவரி 21-22 திகதிகளில் மோதரை இலங்கை இராணுவ கவச வாகன படையணி ரொக் ஹவுஸ் முகாமில் ஏராளமான போர் வீரர்கள், பாடநெறி நிபுணர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் பங்குப்பற்றலில் இடம்பெற்றது.
இலங்கை கவச வாகன படையணியின் எதிர்காலம் குறித்து முக்கியத்துவம் செலுத்தப்பட்ட இலங்கை கவசவாகன படையணியால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் அமர்வாகும். சவால்கள், வாய்ப்புகள், பாரம்பரியங்கள் மற்றும் அதிகாரிகளை மதித்தல்' போன்ற கருத்துக்கள் இதன்போது முன்வைக்கப்பட்டதோடு இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியும் 61 வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட அவர்களினால் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் கவச வாகனப் படையணி மற்றும் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவசம், இலங்கை இராணுவ கவசப் படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் அணில் பீரிஸ் ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த அமர்வில் மேஜர் ஜெனரல் எம்.எச்.குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மேஜர் ஜெனரல் என்.ஏ.ரணசிங்க (ஓய்வு) சிறப்புரை ஆற்றினார். 'இலங்கை கவச வாகனப் படையணியின் எதிர்காலம்' என்ற கருப்பொருளின் கீழ் முதல் நாள் அமர்வுகள் கேணல் ரசிக குணசேன தலைமையில் நடைபெற்றது இதன்போது சவால்கள் மற்றும் வாய்ப்புகள்', 'இலங்கையில் வளர்ந்து வரும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களில் கவச வாகனப் படையணியின் பணி', 'பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் கவச வாகனப் படையணியின் நடவடிக்கைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள்', 'எதிர்கால சூழலில் கவச வாகனப் படையணியின் நிலைத்தன்மை; இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அமர்வுகளுக்கு கலந்து கொண்டவர்களில் இலங்கை இராணுவ கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய (ஓய்வு) மற்றும் கேணல் அன்டன் விஜேசேகர ஆகியோரும் உள்ளடங்குவர்.
இரண்டாம் நாள் அமர்வுகளில் கேணல் கமிந்த சில்வா தலைமையில், 'பாரம்பரியங்கள் மற்றும் அதிகாரிகளைப் மதித்தல்', "இராணுவத்தின் முக்கியத்துவம்", 'படைப்பிரிவு மூலம் தொழில் திறனை மேம்படுத்துதல், தொழில்முறை சிப்பாய்க்கு எழும் சவால்கள்' மற்றும் தலைமை; தற்போதைய சூழலில் ஓர் இராணுவத் தலைவரை உருவாக்குதல் முதலியன தலைப்புக்களில் கலந்துரையாடப்பட்டன. பிரிகேடியர் ஆர்.எம்.ஜெய்சிங்க (ஓய்வு), பிரிகேடியர் சி.எஸ்.என்.பி முதன்நாயக்க (ஓய்வு) மற்றும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி (ஓய்வு) ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவிற்கு இறுதி அவதானிப்புகள் மற்றும் உற்பத்திப் பரிந்துரைகள் பங்கேற்பாளர்களால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது இயந்திரவியல் காலாட் படையணியின் சில அதிகாரிகள் விரிவான ஆலோசனைகளை வழங்கினார்கள். பிரதம அதிதி பேச்சாளர் மற்றும் அனைத்து பேச்சாளர்களுக்கும் இலங்கை கவசப் படையணியின் தளபதி அவர்களினால் அறிவுசார் திறமைகளைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.