பணிப்பகங்களின் பிரதிநிதிகள் இணைந்து ஓய்வுபெற்ற போர்வீரர்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு

2nd February 2022

பணியாளர் நிர்வாக பணிப்பகம், ஊதியம் மற்றும் பதிவுகள் பணிப்பகம், இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகம், நலன்புரி பணிப்பகம், படைவீரர் விவகார பணிப்பகம், சட்ட சேவைகள் பணிப்பகம், இராணுவ நலன்புரி நிதி பணிப்பகம், இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சேவைகள் பணிப்பகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், இணைந்து நிலுவையில் உள்ள பிரச்சினைகள், தேவைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விடயங்களைத் தீர்க்கும் நோக்குடன், இலங்கை சிங்கப் படையணியின் தலைமையகத்தில் முழு நாள் ஆலோசனைப் பட்டறை புதன்கிழமை (26) நடைபெற்றது.

புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் துஷான் சேனாரத்ன தலைமையில் இந்த ஏற்பாட்டில் அந்தந்த பிரிவு பிரதிநிதிகள் மற்றும் ஓய்வுபெற்ற போர்வீரர்கள் கலந்துகொண்டனர். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் பிரச்சினைகளை கவனத்துடன் எடுத்துரைத்ததுடன் இராணுவத்தில் உள்ள பல்வேறு பணிப்பகங்களின் அந்தந்த பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து சீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் பி.டி.ஏ.ஜி சேனாதீர மற்றும் இலங்கை சிங்கப் படையணியின் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.