இராணுவ நடமாடும் தடுப்பூசி குழுவினர் மீண்டும் பணியில்
2nd February 2022
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்திற்கு கைகொடுக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவக் குழுக்கள் திங்கட்கிழமை (31) பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் அனைத்து ஊழியர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது.
இதேபோன்று நடமாடும் இராணுவ மருத்துவக் குழுக்கள் தற்போதைய 'தடுப்பூசி வாரத்தில்' நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு முதல் பகுதியில் தொற்றுநோய் நாட்டைத் தாக்கியபோது இராணுவ மருத்துவக் குழுக்கள் நாடு முழுவதும் முடிந்தவரை அதிகமான பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக தடுப்பூசி மையங்கள் மற்றும் நடமாடும் தடுப்பூசி திட்டங்களை நடத்துவதற்கு முன்னோடியாக இருந்தன. இராணுவப் படையினர் விரைவாகவும் முறையாகவும் தமது பொறுப்புக்களை வெற்றிகரமானதாக நிறைவேற்றியதனால் இத் திட்டம் அனைத்து மக்களின் பாராட்டையும் பெற்றது.