கடும் காற்றுவீச்சினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு துரித உதவி
11th September 2021
அதிக காற்றுவீச்சினால் பாதிக்கப்பட்ட தம்பான கெசெல்வத்த பகுதி கிராம மக்களின் 21 வீடுகளை மறுசீரமைத்தல் மற்றும் வீதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட நிவராண பணிகள் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேட் சிப்பாய்களால் சனிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டது.
24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா மற்றும் 241 வது பிரிகேட் தளபதி கேணல் சந்திர அபேகோன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இரண்டு அதிகாரிகள் உட்பட 22 சிப்பாய்கள் அடங்கிய குழுவினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அப்படையணியின் படையினரால் மேற்படி தேசமடைந்த வீடுகள் சீரமைக்கப்பட்டதுடன், வீதிகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
தம்பான பிரதேச செயலாளர், தேவாலஹிந்த கிராம சேவகர், தம்பான அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும் இங்கினியாகல பொலிஸ் நிலையத்திள் பொலிஸார் ஆகியோரின் ஆதரவுடன் படையினரால் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.