இராணுவ தலைமையக போர் கருவிகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பு
11th August 2021
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் உள்ள போர்க் கருவிகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஹிரோஷ வனிகசேகர இன்று (10) காலை அவருக்கான அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்தே புதிய தளபதி நியமனம் பெற்றுள்ளார்.
அதனையடுத்து புதிய பணிப்பாளர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டார். சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் ஹிரோஷ வனிகசேகர, இந்த புதிய நியமனத்திற்கு முன்பு இராணுவ வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமனம் வகித்தார்.