எம்2சி தொடர்பான கற்கை நெறியினை பூரத்திசெய்த 2ம் தொகுதி அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

4th August 2021

கூட்டு தொழில்முயற்சியாண்மைக்கு இராணுவம் (எம்2சி) தொடர்பான கற்கை நெறியின் 2ம் தொகுதி குழுவினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (1) வோடர்ஸ் எட்ஜ் இல் இடம்பெற்றது.

இதில் ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள பன்னிரண்டு மேஜர் ஜெனரல்கள், மூன்று பிரிகேடியர்கள், நான்கு ரியர் அட்மிரல் மற்றும் ஐந்து கொமோடோக்கள் / ஏயார் கொமோடோர்கள் உள்ளடங்கிய முப்படைகளின் 24 அதிகாரிகள் தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுகொண்டனர். இவர்கள் சிவில் துறையில் பல்வேறு பொறுப்புகளை பொறுப்பேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் குறித்த நிறுவன ஸ்தாபகரான ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) அவர்களின் அழைப்பை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ( ஓய்வு) கமால் குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கான அனுசரணையானது வரையறுக்கப்பட்ட ACCESS இன்ஜினியரிங் பிஎல்சி நிறுவனத்தினால் திரு சுமல் பெரேரா அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டுள்ளதுடன் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்காக மார்ச் 2021 இல் தொடங்கப்பட்ட குறித்த திட்டத்தின் இரண்டாவது பாடநெறியானது சேவையிலுள்ள முப்படையினரையும் உள்ளடக்கி நடாத்தப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவில் (2 வது தொகுதி) அழைக்கப்பட்டவர்களில் இராணுவத் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, ACCESS நிறுவன தலைவர் திரு சுமால் பெரேரா, கடற்படை மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டு தொழில்முயற்சியாண்மைக்கு இராணுவம் (M2C) ஆனது சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) அவர்கள் உந்து சக்தியாக இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் தனது உரையின் போது தெரிவித்தார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, மற்றும் முப்படைகளின் தளபதிகளின் ஒத்துழைப்புடன் ஜெனரல் ரத்நாயக்க (ஓய்வு) அவர்களின் தலைமையில் நிருவகிக்கப்படும் இந்த திட்டமானது ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிகளை, உயர் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் நிலைக்கு தகுதியானவர்களாத மாற்றியுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேலு கூறுகையில், ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேவையான இதுபோன்ற துறைசார் அறிவை மேம்படுத்தி பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியானவர்களாக மாற்றியமைக்கப்பட்டதன் மூலம் இத்துறையில் காணப்பட்ட இடைவெளியைக் குறைக்கப்பட்டமைக்கு தனது நன்றி தெரிவித்தார்.

இந்த முழு நிகழ்வினை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பங்குதாரர்களான எக்சஸ் இன்ஜினியரிங் மற்றும் மனித வள முகாமைத்துவ சர்வதேச கற்கை நிலையம் (ஐஐஎச்ஆர்எம்) வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியை தெரிவித்ததுடன் ஓய்வுபெறும் இராணுவ அதிகாரிகளை நிறுவனத் துறையில் சாத்தியமான தலைவர்களாக மாற்றுவதற்கான இந்த வகையான ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு), விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கடற்படை பிரதி பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன, எக்சஸ் இன்ஜினியரிங் தலைவர் சுமல் பெரேரா, மனித வள முகாமைத்துவ சர்வதேச கற்கை நிலைய (ஐஐஎச்ஆர்எம்) முகாமைத்துவ பணிப்பாளர் ரஞ்ஜீவ குலதுங்க, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதி தலைவர் துமிந்த ஹுலங்கமுவ, பெருநிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.