55 படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்.
1st July 2021
யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டைக்காடு 55 வது படைப்பிரிவின் 25 வது தளபதியாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன புதன்கிழமை (23) பதவியேற்றுக்கொண்டார்.
55 வது படைப்பிரிவுக்கு வருகைத் தந்த புதிய தளபதியினை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களால் வரவேற்கப்பட்டதுடன், புதிதாக நியமனம் பெற்ற தளபதி மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
55 வது படைப்பிரிவின் கட்டளை பிரிகேட் தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், நாட்டில் நிலவும் கொவிட் – 19 பரவல் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன இந்த புதிய நியமனத்திற்கு முன்பாக கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பிரதேச தளபதியாக கடமையாற்றினார். மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.