வன்னி படைகளின் ஏற்பாட்டில் 165 நிவாரண பொதிகள் மத தளங்களுக்கு வழங்கி வைப்பு
27th June 2021
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வட்டவல தேயிலை நிறுவனத்தினால் 7500 ரூபாய் பெறுமதியான 165 நிவாரண பொதிகள் கையளிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி காலத்தில் வன்னி பகுதியிலுள்ள மத வழிபாட்டு தளங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இவ்வகையான பொருட்கள் கோரப்பட்டிருந்தன.
இந்த நன்கொடை வட்டவல தேயிலை நிறுவனத்தின் சிரேஸ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் திருமதி அனுராதா தஸநாயக்க அவர்களால் தற்போது காணப்பட்டும் நிலைமையகளுக்கு மத்தியில் ஆலயங்களுக்கு பக்தர்களின் வரவில் பற்றாக்குறை காணப்படுவதை கருத்திற்கொண்டு இத்திட்டத்துக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இத்திட்டம் (2021 ஜூன் 17,18,19 மற்றும் 24 ) நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டதுடன், பொசன் பெளர்ணமி தினத்தில் குறித்த பொதிகள் ஆலயங்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார , 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்க, 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, 211 மற்றும் 563 பிரிகேட் தளபதிகள், வட்டவல தேயிலை நிறுவன அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.