58 வது படைப் பிரிவின் படையினரால் வென்னப்புவ – உடப்புவ கரையோரப் பகுதியில் சுத்தப் படுத்தும் பணிகள்

14th June 2021

சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்த 'எக்ஸ் பிரஸ் பேர்ள்' கொள்கலன் கப்பலில் இருந்து வெளியான குப்பைகள் காரணமாக பாதிக்கப்பட்ட வென்னப்புவ – உடப்புவ கடலோரப் பகுதிகள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 58 வது படைப் பிரிவின் தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 58 வது படைப் பிரிவின் படையினரால் சுத்தம் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

பல அதிகாரிகளின் தலைமையில் படையினரால் ஞாயிற்றுகிழமை 6 ஆம் திகதி இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், அனைத்து குப்பைகளையும் சுத்தம் படுத்தப்பட்டன.