இலங்கையின் 76 வது சுதந்திர தினம் காலி முகத்திடலில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது
5th February 2024
இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2024 அன்று கொழும்பு காலி முகத்திடலில் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது கௌரவ பிரதமர், சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகள், சிவில் உயரதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்களின் ன் பங்கேற்புடன் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை நேர்த்தியான மற்றும் எளிமையான காட்சியுடன் அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தை அடையாளம் காட்டும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி வருகை தந்தார். பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், பிரதம நீதியரசர், கடற்படையின் அட்மிரல் ஒப்பீலீப் விமானப்படையின் மார்ஷல், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள், பாதுகாப்புப் பதவி நிலை பிரதாணி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் இராஜதந்திரிகள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் பிரதம அதிதி அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் நிகழ்வை அலங்கரித்தனர். அதிமேதகு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், தாய்லாந்து பிரதமர் மாண்புமிகு ஸ்ரேத்தா தவிசின் அவர்கள் 76 வது தேசிய சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த அதிமேதகு ஜனாதிபதியவர்களை, பிரதமர், பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றதுடன், இராணுவம் பொலிஸ் மற்றும் பொலிஸாருடன் கூடிய வண்ணமயமான அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டார்.
அதன் பின்னர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுடன், பொலிஸ் மா அதிபர் இணைந்து, அன்றைய பிரதம அதிதியான அதிமேதகு ஜனாதிபதியை பிரதான கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், 'மகுல் பேர' (மங்கள வாத்தியம்) முழங்களுடன் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பாடசாலை மாணவ, மாணவியர்கள் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைத்து தேசபக்தி இதயங்களையும் ஒரு சுதந்திர தேசமாக பெருமையுடன் நிரப்பியது, பழமையான, ஒப்பிடமுடியாத மற்றும் மாறுபட்ட கலாசார நெறிமுறைகளால் வண்ணமயமாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விசேட மேடையில் இருந்த ஜனாதிபதி அவர்களுக்கு, பாடசாலை மாணவியர் குழுவினால் வழங்கப்பட்ட ‘ஜயமங்கள காத்தா’ மற்றும் ‘தேவோ வஸ்ஸது காலேன’ பாராயணம் மூலம் ஆசிர்வாதம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னத நோக்கத்திற்காக உயிர்நீத்த அனைத்து தேசபக்தர்கள் மற்றும் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்றைய நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாக வர்ணமயமான முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்பு முப்படைகளின் சேனாதிபதியான கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை பீரங்கி படையணியினால் மரியாதை செலுத்தும் வகையில் வழமையான 21 பீரங்கி குண்டுகளால் மரியாதை வழங்கப்பட்டது.
சிறிது நேரத்தின் பின்னர், முப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பொலிஸ், பொலிஸ் விஷேட படையணி, சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தேசிய மாணவ சிப்பாய் படையணி உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு மரியாதை இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில், இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய வழங்கப்பட்டது.
அன்றைய அணிவகுப்பில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வாகனங்களின் அணிவகுப்பும் இடம் பெற்றது. அவற்றின் சில நடவடிக்கைகளுக்காக புதுபிக்கப்பட்டவை.
அதனைத் தொடர்ந்து இலகுரக விமானங்களின் கண்காட்சி, கமாண்டோ படையினர் மற்றும் விஷேட படையினர் உட்பட முப்படை வீரர்களின் பரசூட் காட்சிகள் அன்றைய நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்த்தனர். அவர்களுக்கு விமானப் படையைச் சேர்ந்த விமானப் பணியாளர்கள் உதவினர்,
பொலிஸ், விஷேட பொலிஸ் படையணி மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட மொத்தம் 6,863 முப்படையினர், தமது சம்பிரதாய ஆடைகளை அணிந்து கொண்டு, ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தி அணிவகுப்ப மரியாதையில் பங்கு பற்றினர். மேலும், தேசிய மாணவ சிப்பாய் படையணியின் உறுப்பினர்களும் அணிவகுப்பின் முக்கிய பகுதியை வண்ணமயமாக்கினர். அனைத்து இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தமிழில் தேசிய கீதத்தை பாடியதுடன் அன்றைய தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
அதன் பின்னர், இலங்கை கடற்படைக் கப்பலான 'சயுரா' வில் இலங்கை கடற்படை மாலுமிகள் 25 துப்பாக்கி வேட்டுகளுடன் தேசத்திற்கு மரியாதை செலுத்தினர்.