தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியில் மேலும் 279 பயிளவல் அதிகாரிகளின் விடுகை

16th December 2023

தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரியான இராணுவ கல்வியற் கல்லூரியினால் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 279 பரிபூரணமாண பயிலிளவல் அதிகாரிகளை சனிக்கிழமை (16) பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாடநெறி 92,92பி மற்றும் குறுகிய பாடநெறி 20 ஆகியவற்றின் மாலைத்தீவு,ருவாண்டா செனகல் மற்றும் சூடானின் 06 வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 279 பயிலிளவல் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பில் இணைந்துகொண்டு அவர்களுக்கு அதிகார வாளினை ஜனாதிபதி வழங்கினார்.

பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கெளரவ பிரமிதா பண்டார தென்னகோன்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள்/இணைப்பாளர்கள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளரின் பாரியார் திருமதி சித்ராணி குணரத்ன, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்க்கைத் துணைவியர், பெற்றோர்கள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகளின் உறவினர்கள் ஆகியோர் இவ் 98 வது விடுகை அணிவகுப்பை கண்டுகளித்தனர்.

முதல் நிகழ்வாக குதிரைப்படையினை முதன்மை படுத்திய ஊர்வலம் பிரதம அதிதியை இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு சதுக்கத்திற்கு அழைத்து வந்தது. இராணுவ மரபுகளுக்கு இணங்க, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் படையினர் முதலில் அன்றைய பிரதம அதிதியான கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை வழங்கினர்.

பின்னர், அன்றைய பிரதம அதிதியும் விருந்தினர்களும் இணைந்து உயிரிழந்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற கடந்த கால தியாகங்களை மறக்காமல் அன்றைய நிகழ்ச்சி நிரலின் முதல் அம்சமாக அணிவகுப்பு மைதானத்திக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ கல்வியற் கல்லூரியின் போர் வீரர் நினைவுச் தூபியில் மலர் அஞ்சலி மற்றும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு மைதானம், அன்றைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு ஏற்றவாறு பின்னணியில் பல வண்ண இராணுவக் கொடிகளுடன் அற்புதமாக காட்சியளித்தது. அணிவகுப்பு தளபதியான இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் யுஎஸ் ரணவீர பீஎஸ்சி அவர்கள் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு, விசேட மேடையில் அன்றைய பிரதம அதிதியிடம் முறையான அனுமதி கோரினார்.

அணிவகுப்பின் முறையான பரிசீலனைக்குப் பிறகு, பிரதம அதிதி புதிய அதிகாரிகளிடமிருந்து கௌரவ மரியாதையினை பெறுவதற்கு முன்னர் அவர்களின் மிகவும் போற்றப்பட்ட அதிகாரத்தை அடையாளப்படுத்தும் வகையில், பயிலிளவல் அதிகாரிகளுக்கு மிகவும் விலையுயர்ந்த ஜனாதிபதியின் அதிகாரவாணை வாள்களை வழங்கினார். தொடர்ந்து அன்றைய பிரதம அதிதி தனித்தனியாக சிறந்த சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கினார்.

இந்த புதிய பயிளவல் அதிகாரிகள், போர், திறன்கள் மற்றும் மனோபாவங்கள் பற்றிய அத்தியாவசிய அறிவைக் கொண்ட, தந்திரோபாய நிலை தலைவர்களாக, பிரகாசமான தொழில் வாய்ப்புகள் மற்றும் வாழ்நாள் முன்னேற்றத்திற்கான சிறந்த அடித்தளத்துடன் எதிர்காலத்தில் செயல்பாட்டு மற்றும் மூலோபாய அளவிலான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்.

கௌரவ ஜனாதிபதி அவர்கள் பட்டதாரிகளுக்கு ஆற்றிய சுருக்கமான உரையில் அவர்களின் சாதனைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களின் கடமைகளை பொறுப்புடனும் விடாமுயற்சியுடனும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அன்றைய சிறப்பு விருந்தினர்களுக்கு உற்சாகத்தை அளித்து, புதிதாக அதிகாரவாணை பெற்ற அதிகாரிகள் புகழ்பெற்ற 'மகர தோரணத்தின்' படிகள் ஊடாக இராணுவ கல்வியற் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரிக்கு மரியாதை செலுத்தியவாறு அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மைதானத்தில் பாகாப்புப் வீரர்கள் அதைத் தொடர்ந்து விடைப்பெற்றனர்.

சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில்,இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களுடன் இணைந்து அன்றைய விருந்தினர்கள் வீரமிகு இளம் அதிகாரிகளின் தோள்களில் ஜனாதிபதி அதிகாரவாணையின் அடையாளம் அணிவித்தனர். புதிய அதிகாரிகளின் அன்பானவர்களுக்காக, இதுவரை பயிற்சிக் காலத்தில் அவர்களை மிகவும் தவறவிட்டவர்களுக்கு நித்திய நினைவுகளால் நிரப்பப்பட்ட மகிழ்ச்சியின் தருணம் இது.

விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

பயிலிளவல் அதிகாரி பாடநெறி 92 - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலாமிடம் – பயிலிளவல் அதிகாரி பீ.ஜீ.எஸ் பிரசாதித்த

வாள் கௌரவம் – படையலகு அதிகாரி எச்.எஸ்.எஸ் கால்லகே

பயிலிளவல் அதிகாரி பாடநெறி 92 பி - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலாமிடம் – குழுத்தலைவர் எச்.எல்.ஐ காவிந்த

வாள் கௌரவம் - குழுத்தலைவர் எச்.எல்.ஐ காவிந்த

அதிகார பிரம்பு கௌரவம் – குழுத்தலைவர் ஜேஎம்வீ ரூகுண்டோ

பயிலிளவல் குறுகிய பாடநெறி 20 - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலாமிடம் – குழுத்தலைவர் ஆர்என்ஏஎம்கேபி வரக்காகொட