10,236 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்
7th April 2021
இன்று (07) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 177 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 19 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 158 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் அதிகபடியாக 31 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 29 பேர் கொழும்பு மாவட்டம், 28 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 70 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (07) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 93,771 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 89,345 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 90,707 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 2,476 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 145 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் மேலும் 02 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிபிலை மற்றும் அம்பாறை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதன்படி (05) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 588 ஆகும்.
மேலும், (07) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 101 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,236 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (06) 6,227 பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |