தியதலாவை துப்பாக்கி சுடும் பயிற்சி கல்லூரியில் விருது வழங்கள் விழா

2nd March 2021

2021 ஆம் ஆண்டிற்கான படைப்பிரிவுகளின் உள்ளக செயன்முறை துப்பாக்கி சுடும் போட்டிகளில் வென்றவர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று (25) பிற்பகல் தியதலாவவில் உள்ள மார்க்ஸ்மேன்ஷிப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டார்.

திறந்த, சேவை படையணிகள் மற்றும் புதியவர்கள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இந்த உள்ளக துப்பாக்கி சுடும் போட்டிகள் 1953 ஆம் ஆண்டு முதல் முறையாக தியதலாவவில் உள்ள பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த கல்லூரி ஓர் தொழில்முறை பயிற்சி மையமாக நிறுவப்பட்ட பின்னர், துப்பாக்கி சுடும் வீரர்கள் புதிய இலக்குக்களை அடைந்துகெண்டதுடன் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்று வருகின்றனர்.

வியாழக்கிழமை (25) அன்று இராணுவம், இலங்கை இராணுவதொண்டர் படை, இலங்கை இராணுவ சிறு ரக ஆயுதக் சங்கம் மற்றும் இராணுவத்தின் மார்க்ஸ்மேன்ஷிப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி கல்லூரி ஆகியவற்றின் கொடிகள் உள்ளடங்களாக சகல படைப்பிரிவுகளினதும் கொடிகள் ஏற்றப்பட்டு விருது வழங்கும் விழா ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து போர் வீரர்களை நினைவுகூறும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இராணுவத்தின் தேசிய பாடலும் இசைக்கப்பட்டது.

அத்தோடு மார்க்ஸ்மேன்ஷிப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி கல்லூரியின் தளபதியும் இலங்கை இராணுவ சிறு ரக ஆயுதக் சங்கத்தின் பிரதி தலைவருமான பிரிகேடியர் விபுல இஹலகேவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து மார்க்ஸ்மேன்ஷிப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி கல்லூரியின் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் கொண்டுள்ள திறன்களையும், அடைந்த இலங்குகளையும் தொழில்முறை தரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டதோடு, போட்டியிட்ட வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் பிரதம விருந்தினரால் வழங்கிவைக்கப்பட்டன.

அதன்படி இந்த ஆண்டுக்கான திறந்த சம்பியன்ஷிப் போட்டியில் சம்பியன்காளாக கெமுனு ஹேவா படைப்யணியைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், இரண்டம் இடத்தை கஜபா படையணியின் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் சுவீகரித்துக்கொண்டனர். மூன்றாம் இடத்தை இலங்கை இராணுவத்தின் விஷேட படையணியனர் பெற்றுக்கொண்டனர்.

இந்த திறந்த போட்டி பிரிவுகளில் 27 அணிகள் போட்டியிட்டதுடன், 11 அணிகள் நோவிஸ் பிரிவில் போட்டியிட்டன.

நோவீஸ் பிரிவில், கொமாண்டோ படைப்பிரிவின் துப்பாக்கி சுடும் வீரர்கள் முதலிடத்தையும், கெமுனு ஹேவா படையின் துப்பாக்கிச் சுடும் வீரர்களால் 2 இடமும், விஷேட படையினரால் 3 வது இடமும் வெற்றி கொள்ளப்பட்டது.

சேவை பிரிவின் சம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ பொது சேவை படையினர் கைப்பற்றியதுடன், இரண்டாமடத்தை இராணுவ பொலிஸ் படையினரும் மூன்றாம் இடத்தை பொறியில் சேவைப்பிரிவும் பெற்றுக்காண்டன.

திறந்த போட்டி பிரிவில், சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராக கெமுனு ஹேவா படையணியின் அதிகாரவணை அற்ற அதிகாரி 1 டபிள்யூ.பி.என் தம்மிக தெரிவு செய்யப்பட்டதுடன், சேவை பிரிவில், சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக இலங்கை இராணுவ சேவை படையின் அதிகாரவணை அற்ற அதிகாரி 1 டபிள்யூ.எம்.டி.கே விக்ரமசிங்கவும், நோவீஸ் பிரிவில் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராக கெமுனு ஹேவா படையின் சாதாரண படை வீரர் ஆர்.எம்.ஆர் புத்திக வென்றார்.

இதற்கிடையில், இலங்கை கவசப் படையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியந்த காரியவசம் மற்றும் பிரிகேடியர் மற்றும் ஜெனரல் தரவரிசைப் பிரிவில் 1 வது இடத்தைப் பிடித்தார். இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் பிரிகேடியர் ஜி.எம்.சி.கே.பி ஏகநாயக்க 2 வது இடத்தையும், இலங்கை சமிக்ஞை படையணியின் பிரிகேடியர் ஜி.எல்.எஸ்.டபிள்யூ லியானகே 3 வது இடத்தையும் வென்றனர்.

கேணல் மற்றும் லெப்டினன் கேணல்களுக்கான பிரிவில், கொமாண்டோ படையணியை சேர்ந்த லெப்டினன் கேணல் ஏ.எம்.டி.என். அபேகோண் 1 வது இடத்தையும், சிங்கப் படையணியை சேர்ந்த வெப்டினன் கேணல் டிஎஸ்சிஎஸ்கே அத்துகேரல 2 ஆம் இடத்தையும், இயந்திரவியல் காலாட்படையணியைச் சேர்ந்த லெப்டினன் கேணல் எச்.ஏ.ஏ.என்.சி.பிரபாத் 3 வது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மேற்படி சாதனையாளர்களுக்கு பிரதம விருந்தினர் அந்த சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்களை வழங்கிய வைத்த பின்னர், கூட்டத்தில் உரையாற்றிய போது வெற்றியாளர்களை வாழ்த்தினார். துப்பாக்கி சுடுதலில் தொழில்முறை என்பது உலகின் எந்தவொரு இராணுவத்திற்கும் இன்றியமையாத திறமைகளில் ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

விருது வழங்கும் விழாவில் பதவி நிலை அதிகாரிகள் , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

இராணுவ சிறு ரக ஆயுத பிரிவின் செயலாளர் மேஜர் சுபுன் சமரக்கொடி அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டது.

தேசிய மற்றும் உள்ளகரீதியாக வெற்றிகளை பெற்றுக்கொண்டவைக்கு மேலதிகமாக இதுவரை வெளிநாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்து கொண்ட அல்லது வெற்றிபெற்ற சம்பியன்ஷிப் போட்டிகள் பின்வருமாறு

11 வது தெற்காசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் - 2010 பங்களாதேஷில்

4 வது ஆசிய ஏயர் ரைபிள் சாம்பியன்ஷிப்

11 வது தெற்காசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்

லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் 2012

47 வது உலக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் - 2012

பொதுநலவாய விளையாட்டு – ஸ்கொட்லாந்தில் 2014

11 வது உலக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் - செக் குடியரசில் 2014

8 வது ஆசிய ஏயர் கன் சாம்பியன்ஷிப்,

தூர கிழக்கு ஆசியா கைத்துப்பாக்கி சாம்பியன்ஷிப் - 2015 மலேசியாவில்

குவைத்தில் 13 வது ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப்

2016 இல் இந்தியாவில் ஒலிம்பிக் காலாண்டு சாம்பியன்ஷிப்

12 வது தெற்காசிய துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப் - 2016 இந்தியாவில்

12 வது ஐ.எம்.எஸ்.எஸ்.யூ உலக சாம்பியன்ஷிப் - 2016

ரியோ ஒலிம்பிக் 2016

48 வது உலக துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்

முதல் ஐ.பி.எஸ்.சி ரைபிள் உலக சாம்பியன்ஷிப் - 2017 ரஷ்யாவில்

செக் குடியரசில் 20 வது ஐ.எம்.எஸ்.எஸ்.யூ உலக சாம்பியன்ஷிப் - 2017

உலக கைத்துப்பாக்கி சுடும்போட்டி - 2017 பிரான்சின் சாட்டாரூக்ஸ்

13 வது ஐ.எம்.எஸ்.எஸ்.யு உலக சாம்பியன்ஷிப் - 2018 பின்லாந்தில்

13 வது ஆசிய படப்பிடிப்பு சாம்பியன்ஷிப் - 2019 நேபாளத்தில்

அவுஸ்திரேலிய கைத்துப்பாக்கி சாம்பியன்ஷிப் - 2019 |