மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கொவிட் 19 முன்னேற்றங்களை மதிப்பீடு செய்கிறார்கள்

14th February 2021

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (2) 53 வது படைப்பிரிவின் தளபதியும் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே தலைமையில் மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது,

மாத்தளை மாவட்ட செயலாளர் திரு எஸ்.எம்.பி. பெரேரா மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பங்கு பற்றலில் மாத்தளை மாவட்டத்தில் கொவிட் - 19 தொற்றாளர்கள் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு , தொற்று பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், சமூகத்தின் மீதான தாக்கம், தனிமைப்படுத்தும் நடைமுறைகள், தற்போதைய முன்னேற்றம், பொறுப்புகள், விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், பி.சி.ஆர் / ஆன்டிஜென் சோதனைகளை நடத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் பொலிஸ், அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்குபற்றினர்.

மாவட்டத்தில் கொவிட் -19 தொற்று தடுப்பது தொடர்பான விடயங்கள் பற்றி விவாதிக்க காவல்துறை பொலிஸ் சுகாதார ஊழியர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதேநேரம் யாழ்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் யாழ்ப்பாண மாவட்ட கொவிட் -19 கட்டுப்பாடுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. கே. மகேஷனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடான உத்தியோகபூர்வ சந்திப்பு புதன்கிழமை (03) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திற்கான கொவிட் - 19 தடுப்பு ஒருங்கணைப்பு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்தா பண்டார தலைமையில் 2021 பெப்ரவரி 01 ம் திகதி வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றனர். பிரந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் , அரசு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் பங்குபற்றலில் இடம்பெற்றது.

கூட்டத்தின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வவுனியா மாவட்ட செயலாளர் திரு எஸ்.எம். சமன் பந்துலசேன மற்றும் பலரின் பங்குபற்றலில் கொவிட் -19 நிலை, பரிமாற்றல் தடுப்பு நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது போன்றவற்றை மதிப்பீடு செய்தனர். சுகாதார சேவை பிராந்திய பணிப்பாளர்வைத்திய மகேந்திரன் விளக்கினார் வவ்னியா நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தற்போதைய நிலைமை மற்றும் சமூகத்தில் நோய் வேகமாகப் பரவாமல் தடுக்க சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை கொவிட் - 19 தொற்று தடுப்பதற்கான பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை (11) மாவட்ட செயலகத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் சன்னா வீரசூரிய மற்றும் மாவட்ட செயலாளர் திரு. டப்ளியு ஏ தர்மசிரி தலைமையில் இடம்பெற்றது.

பொலன்னறுவை மாவட்ட தொற்று தடுப்பிற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் மற்றும் மேஜர் ஜெனரல் சன்னா வீரசூரிய ஆகியோர் அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். அண்மைய கதுருவெல கொவிட் கொத்தணியை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்ததற்காக சுகாதார ஊழியர்களுக்கு அவர்கள் சிறப்பு நன்றியை தெரிவித்தனர்.

23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த, பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் மற்றும் சில அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். |