முஸ்லீம் எய்ட் நிறுவனத்தினால் தனிமைப்படுத்தல் மையங்களின் பயன்பாட்டுக்கு அவசியமான சுகாதார பொதிகள் அன்பளிப்பு
9th February 2021
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச ரீதியிலான மேம்பாட்டு நிறுவனமான முஸ்லீம் எய்ட் நிறுவனத்தினால் இலங்கையர்களின் இனம், மதம், பால் மற்றும் அரசியல் கருத்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், இன்று (9) காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து தனிமைப்படுத்தல் நிலையங்களின் சுகாதார பாதுகாப்புக்கு அவசியமான பொருள்கள் அடங்கிய ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த சுகாதார பொதிக்குள் சுகாதார உபகரணங்கள், சலவை, சவர்க்காரம், கழிப்பறை தூய்மையாக்கிகள், பாதுகாப்பு துவாய்கள், பற்பசைகள், கைக்குட்டைகள், தொற்றுநீக்கு திரவியங்கள் அடங்கிய போத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்ததுடன், ‘முஸ்லிம் எய்ட்’ அமைப்பின் இலங்கை கிளையின் சார்பில் அதன் பணிப்பாளர் ஏ.சி.பைசர் கான், பெறுகை மற்றும் வளங்கள் தொடர்பான அதிகாரி எம்.ஐ. இசாஹுவாக், திட்ட பணிப்பாளர் எம்.எச்.எம். அமீர், நிதி முகாமைத்துவ அதிகாரி எம்.பாஹிம் இக்பால் மற்றும் நான்கு பிரதிநிகளும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து இந்த பொதிகளை கையளித்தனர்.
இதன்போது சுகாதார படிமுறைகளை பின்பற்றும் நடத்தைகள் தொடர்பில் எடுத்துரைத்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அந்த சுகாதார சேவையின் முக்கியவத்தை கருத்தில் கொண்டு அன்பளிப்புக்களை வழங்கிய நிறுவனத்தின் பிரதிநிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துடன் உலகலாவிய நாடுகள் தொற்றுநோயை எதிர்க்கொண்டு வருகின்ற போது சமூக பொறுப்பு, இன நல்லிணக்கம், நல்லெண்ணம் என்பன மிகவும் அவசியமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.
'முஸ்லீம் எய்ட’ நிறுவனம் நாட்டின் முக்கிய அவசரநிலைகளின் போது கைகொடுத்து வருவதோடு, நிலையான பொருளாதார வலுவூட்டல், கல்வி ஆதரவு, பேரழிவு அபாயக் கட்டுப்படுத்தல் மற்றும்; நீர் , சுகாதாரம், ஊட்டச்சத்து, வீட்டுவசதி , உட்கட்டமைப்பு, சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குதல் , சமூக ஒத்திசைவு உள்ளிட்ட செயற்பாடுகளின் போது முன் நின்று செயற்படும் அமைப்பாக விளங்குகிறது.
அத்துடன் சுனாமி நிவாரணம், புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை நிவர்த்தி செய்வதல், 2004 சுனாமிக்குப் பின்னரான நிலைமை ஆகிய நேரங்களில் கைகொடுப்பதற்காக 'முஸ்லீம் எய்ட’ அமைப்பின் இலங்கைக்கான அலுவலகம் 2005 மே மாதத்தில் திறக்கப்பட்டதுடன் 2008 ஆம் ஆண்டில் இது ஒரு நாட்டு அலுவலகத்துடன் இலங்கை இராணுவத்தின் ஆதரவோடு எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதிப் போர்கள் நடந்து கொண்டிருக்கும்போது, நீர் மற்றும் சுகாதாரம், பரிந்துரைக்கப்பட்ட வைத்தியசாலைகளை இயக்குதல், சுகாதார பொதிகளை விநியோகித்தல் போன்றவற்றின் மூலம் இடம்பெயர்ந்தோருக்கு இந்த அமைப்பு உதவிகரம் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தகதாகும். |