விஜயபாகு காலாட் படையின் நிலை உயர்வு பெற்ற அதிகாரிகள் கௌரவிப்பு

9th February 2021

விஜயபாகு காலாட் படையின் தலைமையகத்தில் அந்த படையின் நிலை உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு இராணுவ சம்பிரதாயங்களின் படி கௌரவம் செலுத்தப்பட்டது. அதன்படி குருணாகல் போயகன விஜயபாகு காலாட் படையின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (09) இந்த நிகழ்வு கொவிட் – 19 தடுப்புக்கான பாதுகாப்பு நடைமுறைமைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டது.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல மற்றும் 581 பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் சுமால் ஹேமரத்ன ஆகியோர் நிலை உயர்வு பெற்ற பின்னர் தங்களது படை தலைமையகத்திற்கு கன்னி விஜயத்தை மேற்கொண்ட போது இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

அதன்படி விஜயபாகு படைத் தலைமையகத்திற்கு பிரிகேடியர் சுமல் ஹேமரத்த வருகைத் தந்தபோது அவருக்கு விஜயபாகு காலாட் படையின் பிரதி நிலையத் தளபதி கேணல் ருக்‌ஷான் கண்ணங்கரவால் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், நுழைவு வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டதுடன், பிரிகேடியர் சுமல் ஹேமரத்தவால் உயிரிழந்த போர் வீரர்களின் நினைவு துபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனையடுத்து நிலை உயர்வு பெற்றவர்களான மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மற்றும் மேஜர் ஜெனரல் தீபல் புஸ்ஸெல்ல ஆகியோருக்கு சம்பிரதாய பூர்வமான மரியாதை செலுத்தப்பட்டதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் செலுத்தப்பட்டது. பின்னர், அவர்களுக்கு விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவின் நிலையத் தளபதி பிரிகேடியர் நலின் பண்டாரநாயக்க அவர்களுக்கு வரவேற்பு அளித்தார்.

அதன் பின்னர் தளபதிகளால் உயிரிழந்த போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கடந்த கால நினைவுகூரல்களுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தேசபக்தியுடன் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அணிவகுப்பு மரியாதைக்காக பிரதம அதிதிகள் அழைக்கப்பட்டனர்.

பின்னர் பிரதம அதிதிகள் குழு படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அவர்கள் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களுடன் எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டதுடன், தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். அதனையடுத்து படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படைத் தளபதி புதிதாக நிலை உயர்வு பெற்ற சகல அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதோடு விஜயபாகு காலாட் படையணியின் கௌரவத்தை மேம்படுத்துவதுவது தொடர்பான தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்ட பின்னர் அதிகாரிகள் மதிய போசண விருந்துக்கும் அழைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர். |