பாதுகாப்பு செயலாளரினால் ஓய்வுபெற்ற போர் வீரர்களுக்கான பிரத்யேக புதிய ஆடைகள் அறிமுகம்
4th February 2021
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இராணுவ சீருடைகள், இலங்கை முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் தொழில்முறை தரநிலைகள், தனிப்பட்ட தோற்றம் மற்றும் படையணி ஆகியவற்றை எதிர்காலத்தில் பிரதிபலிக்கும் வகையில் ஓய்வுபெற்ற பின்னர் இராணுவ நிலையை அடையாளப்படுத்தும் விதத்தில் அணிவிக்கப்படும். ஒரு 'சிப்பாய்' என்பது ஒரு வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட, மதிக்கப்படும் தொழிலாகும்.
தேசிய நிகழ்வுகள், இராணுவ நிகழ்வுகள் அல்லது இராணு சார்பற்ற செயல்பாடுகளின் போது ஓய்வுபெற்ற முப்படை வீர்ர்களுக்கு அணிவதற்கான புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (2) மாலை கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பொது மக்கள் பாதுகாப்பு , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்கு பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகாஹாதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன மற்றும் முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா, முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் செயலாளர் ஓய்வு பெற்ற கேணல் அஜித் சியம்பலாபிட்டிய ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிலையினரும் புதிய சீருடையை அணிவதற்கான அனுமதியை பெறுவர் அதேநேரம் ஓய்வு பெற்ற முப்படை தளபதிகள், முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஏனைய பதவி நிலையினர், மருத்துவ காரணங்களுக்காக இடைவிலகியவர்கள் ( 10 – 12 வருட சேவைக்காலங்கள்), வெளிநாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்கள், விசேட தேவைக்காக சேவைக்கு மீளமைக்கப்பட்டவர்கள் வெளியிடப்பட்டுள்ள ஆடை வகை , சட்ட திட்டங்களுக்கு இணங்க அணிய முடியும்.
போர்க்களத்தில் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் அந்த போர்வீரரின் பதக்கங்களை தேசிய உடை, சேலை அல்லது சட்டை / கால்சட்டை / பிளேஸர் ஆகியவற்றுடன் நடைமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் அணிய தகுதியுடையவர்கள்.
நிகழ்வு மங்கள விளக்கேற்றல் இறந்த வீழ்ந்த போர்வீரர்களின் நினைவாக ஒரு நிமிடம் மௌனஞ்சலி புதிய ஆடை மற்றும் முறையாக அணியும் விதத்தம் அணியக் கூடிய சந்தர்பங்கள் என்பவற்றை விளக்கும் வீடியோ காட்சி என்பவற்றுடன் ஆரம்பிக்கப்பட்டதோடு முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் செயலாளர் லெப்டினன்ட் கேணல் (ஓய்வு) அஜித் சியாம்பலபிட்டியவின் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா அவர்களின் உரையில் இலங்கையில் முதல் முறையாக இந்த திட்டத்தை செயல்படுத்துவது பற்றியும், முப்படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அதனுடன் தொடர்புடைய முக்கியத்துவம் குறித்தும் விரிவாக விளக்கினார்.
இது தொடங்கப்பட்டதன் அடையாளமாக அன்றைய பிரதம விருந்தினர் ஓய்வுபெற்றவர்களுக்கான ஆடை குறியீட்டைத் அணிய அழைக்கப்பட்டார், வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் முப்படை சேவையாளர்களின் பிரதிநிதிகளிக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் தொப்பிகளை அணிவித்தனர்.
விழாவின் முடிவில், பிரதம விருந்தினர் உரையாற்றுகையில் இராணுவ சீருடையின் மதிப்பையும், ஓய்வுபெற்றவுடன் அதன் பிரதிபலிப்பையிம் எடுத்துக்காட்டினார். ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினராக அல்லது வெளியேறிய வீரராக இராணுவ சீருடைகளை அணிவதற்கான விதிகள் எல்லா சேவைகளுக்கும் ஒத்ததாக இருக்கும், மேலும் விதிமுறைகள் மற்றும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சேவை ஆடை சீருடை அணிய அனுமதிக்கப்படுகிறது, எனவும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், சிரேஸ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பெருந்தொகையானவர்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டனர். |