சுதந்திர ஒத்திகைகயை இராணுவத தளபதி மேற்பார்வை செய்தார்.

3rd February 2021

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெடென்ன, இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரன பொலிஸ்மா அதிபர் சீ டி விக்ரமரத்ன உள்ளிட்ட அனைத்து உயர்மட்ட பாதுகாப்பு பிரதானிகள் 2021 பிப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாட இருக்கும் 73 ஆவது தேசிய சுதந்திர தின ஒத்திகைகளை இன்று காலை (1) கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் மேற்பார்வை செய்தனர்.

இதன்போது மரியாதை அணிவகுப்பு , பாதை திட்டமிடல் என்பவற்றை ஆராய்ந்த இராணுவ தளபதி சுகாதார முறை, இருக்கை ஏற்பாடுகள் என்பன பற்றியும் ஆராய்ந்ததுடன் திருத்தப்பட வேண்டிய விடயங்களையும் பரிந்துரைத்தார்.

இலங்கையின் 73 வது சுதந்திர தினம் சுதந்திர சதுக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர், ஆலோசகர்கள், செயலாளர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலரின் பங்கேற்புடன் வியாழக்கிழமை (04) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. |