இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி அன்பளிப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
29th January 2021
கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தி குணப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவம் பங்களிப்புச் செய்து வருகின்ற நிலையில் அயல் நாடுகளான இலங்கை - இந்திய நல்லிணக்க உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக, இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்ட கொவிட் – 19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட்டின் (AstraZeneca Covidshield) தடுப்பூசிகள் இன்று (28) நாட்டை வந்தடைந்தன.
நாட்டுக்கு வந்தடைந்த தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாய ராஜப்கஷ ஏற்றுக்கொண்டதுடன் அவற்றை இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி. கோபால் பால்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அண்மையில் இலங்கைக்கு தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கயை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்திருந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு விரைவில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர் அந்நாட்டி பிரதான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமார் 500,000 கொவிட் – 19 தடுப்பூசிகளை கொடுத்துள்ளார்.
அந்த தடுப்பூசிகள் A1 281 விமானத்தின் ஊடாக இன்று (28) காலை விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையத்துக்கு இந்த தடுப்பூசிகள் வந்து சேர்ந்த சில நேரங்களில் இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி. கோபால் பாக்லே அவற்றில் சிறிது தொகையை எடுத்து உத்தியோகபூர்வமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
அதனையடுத்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் ஜனாதிபதி இந்த தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சரும் வைத்தியருமான சன்ன ஜயசுமன, இராஜாங்க அமைச்சர்கள், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, விமான நிலைய தலைவர் ஜெனரல்(ஓய்வு) ஜீ.ஏ.சந்திரசிறி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் , இராணுவ தளபதியும்.கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் (ஓய்வு) மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய மற்றும் ஏனைய பல சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகள் இராணுவ தளபதியின் மேற்பார்வையின் கீழ் உரிய இடங்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கப்படவுள்ளதுடன், ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் திரு ல்லித் வீரதுங்க தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய அவசியமான வெப்பநிலையில் தக்கவைக்கப்பட்டு தடுப்பூசிகள் பாதுகாப்புக்கு அவசியமான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.
72 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பான முறையில் இந்த தடுப்பூசி வகைகளை நாட்டின் உரிய பிரதேசங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளும் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இவற்றை முதல் நிலை சுகாதார சேவையாளர்கள், இராணுவத்தினர்,கடற்படையினர், பொலிஸாருக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
‘’ஒரு நபருக்கு இரு தடவைகள் ஏற்றப்பட வேண்டிய இந்த தடுப்பூசி வகைகளை ஏற்றும் பணிகள் கொழும்பு தேசிய மருத்துவமனை, ராகமை வைத்தியசாலை மற்றும், பனாகொடையிலுள்ள இராணுவ வைத்தியசாலை உள்ளிட்ட ஆறு வைத்தியசாலைகளில் நாளை (29) நடைப்பெற்றுள்ளது.
அதனையடுத்து திட்டமிடப்பட்டவாறு நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும், இராணுவ வைத்தியசலைகளுக்கும், நாளை மறுநாள் முதல், திட்டமிட்டபடி மற்ற பகுதிகளுக்கும், அனைத்து இராணுவ மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்படும் என்பதுடன், இந்த தடுப்பூசி ஏற்றுவதற்கான அவசியத்தை கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்றப்படும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா,சீனா உள்ளிட்ட நாடுகளும் இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் தடுப்பூசிகளை வழங்கவுள்ளன என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் கலாநிதி கோபால் பாக்லே நினைவு பரிசொன்றினையும் வழங்கிவைத்தார் |