கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாட்டு பணிகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பிப்பு
6th January 2021
மாவட்ட மட்டங்களில் அனைத்து கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகளையும் ஒருங்கிணைப்பதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட 25 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இப்போது தங்கள் பணிகளை தொடங்கியதோடு, அந்தந்த மாவட்ட செயலகங்களில், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள், அந்தந்த நகர சபை, பிரதேச சபை மற்றும் நிர்வாக அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து மாவட்டத்துடன் தொடர்புடைய ஆலோசனைகள், விவாதங்கள் மற்றும் தடுப்பு வழிமுறைகளை செயல்படுத்தத் தொடங்கினர்.
கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கோட்டுவேகொட , மாவட்ட செயலாளர் திருமதி ஆர். கேதீஸ்வரன் மற்றும் ஏனைய பங்குதார்ர்களுக்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய கொவிட் -19 நிலைமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு மாநாடு செவ்வாய்கிழமை 05 ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டின் போது, முக்கியமான பகுதிகள் தொடர்பான அனைத்து விஷயங்களும் உள்ளடக்கிய உள்ளூர் தனிமைப்படுத்தல், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பிரதேச மூடுதல் கொள்கை, எழுமாற்று பி.சி.ஆர் / விரைவான ஆன்டிஜென் சோதனை நடைமுறைகள், மருந்து மற்றும் உபகரணங்கள் வழங்கல், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.
கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான பொலன்நறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஜனவரி 04 ஆம் திகதி வடமத்திய மாகாண ஆளுநர் திரு மஹீபால ஹேரத் தலைமையில் பொலன்நறுவை மாவட்ட செயலகத்தில் கூடியது.பொலன்நறுவை மாவட்ட செயலாளர் திரு டபல்யுஏ தர்மசிறி ,பொலன்நறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, கிழக்கு பாதுகாப்பு முன்னரங்கு பிரதேச தளபதி பிரிகேடியர் அத்துல அரியரத்ன, பொலன்நறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலன்நறுவை வைத்தியசாலை பிரதி பணிப்பாளர், பொலன்நறுவை மாவட்ட பிரதேச செயலாளர்கள், பொலன்நறுவை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்திய்சகர், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் பல அதிகாரிகள் கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், கொவிட் -19 தடுப்புக்கான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு 2021 ஜனவரி 04 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 22 வது படை பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு. சமன் தர்ஷன பாடிகோரல, மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கொவிட் -19 தொற்று நோயின் திடீர் அதிகரிப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடலினை மேற்கொண்டார்.
தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இது சமூகத்தை உண்மையில் எவ்வாறு பாதிக்கிறது, விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், சீரற்ற பி.சி.ஆர் / ஆன்டிஜென் சோதனைகளை நடத்துவதில் முன்னேற்றம் மற்றும் பொலிஸ், அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளஞடன் ஒருங்கிணைந்து வைரஸ் பரவுவதைக் குறைக்க முறையான பொறிமுறையை செயல்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டது அரசாங்க அதிபர்- திரிகோணமலை, பிரதி பொலிஸ் மா அதிபர்- திருகோணமலை,221 வது பிரிகேட் தளபதி, 223 வது பிரிகேட் தளபதி,திருகோணமலை மற்றும் கந்தலாய் பிரதேசத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ,முதலீட்டு சபையின் பிரதிப் பணிப்பாளர்,திருகோணமலை தொழில்துறை பிராந்திய பணிப்பாளர், பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர், 22 வது படைப் பிரிவின் கேணல் பதவி நிலை அதிகாரி, மற்றும் 22 வது படைப் பிரிவின் எஸ்ஐஓ ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதேபோல், கொவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகளின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியும், யாழ் பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் வியாழக்கிழமை (7) யாழ்ப்பாண மாவட்ட செயலக அலுவலகத்தில் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒரு ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்,. அங்கு தொடர்ச்சியான தடுப்பு பணிகள், தனிமைப்படுத்தும் செயல்முறை, தனிமைப்படுத்தும் நடைமுறைகள், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், சமூக தொலைவு மற்றும் சுகாதார பிரச்சினைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் போன்றவை தேவையான நடைமுறைகளை மறுஆய்வு, மதிப்பீடு மற்றும் செயல்படுத்தல் போன்ற விடயங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
யாழ் மாவட்ட செயலாளர், யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் , சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், 51, 52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், மாத்தலை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாயும் 53 வது படைப் பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் மாத்தலை மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.எம்.பி.கே. பெரேரா மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கிடையிலான தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், சீரற்ற பி.சி.ஆர் / ஆன்டிஜென் சோதனைகளை நடத்துவதன் முன்னேற்றம் மற்றும்பொலிஸ் , அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வைரஸ் பரவுவதைக் குறைக்க முறையான பொறிமுறையை அமல்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பான கலந்துரையாடலானது 2021 ஜனவரி 05 ஆம் திகதி இடம்பெற்றது.
தொற்றுநோயைத் தடுப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மாத்தலை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திரு. ஐடிபி விஜேதிலக, மாத்தலை மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் டொக்டர் சாமிந்த வீரகோண், சுகாதார மருத்துவ அதிகாரி டொக்டர் வசந்த , டொக்டர் நயோமி சேனாரத்ன, மாத்தலை பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். |