மேலும் மூன்று மரணங்கள் பதிவு- நொப்கோ தெரிவிப்பு
6th January 2021
இன்று (8) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 532 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர் ஏனைய 525 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 226 பேர் கொழும்பு மாவட்டம், 72 பேர் கண்டி மாவட்டம், 50 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 177 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (8) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 43001 பேர் ஆகும். அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) மற்றும் மீன் சந்தை கொத்தணியில் (39942) இருந்து மொத்தமாக 36903 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் (8) ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 46779 ஆகும். அவர்களில் 39660 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6897 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (8) கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 638 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் மீரிகல,தெகிவலை மற்றும் கொழும்பு 14 அகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அந்த வகையில் இன்று காலை(8) ம் திகதி வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 222 ஆகும்.
இன்று காலை (8) இந்தியாவில் இருந்து 6E 9034 விமானம் ஊடாக 29 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 30 பயணிகளும் ஜப்பானில் இருந்து UL 455 விமானம் ஊடாக 45 பயணிகளும் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 605 விமானம் ஊடாக 157 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மாலைதீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 30 பயணிகளும் இத்தாலியில் இருந்து UL 1208 விமானம் ஊடாக 32 பயணிகளும் பங்களதேசில் இருந்து UL 190 விமானம் ஊடாக 10 பயணிகளும் உக்ரைனில் இருந்து PQ 555 விமானம் ஊடாக 159 பயணிகளும் மலேசியாவில் இருந்து UL 320 விமானம் ஊடாக 5 பயணிகளும் தென் ஆபிரிக்காவில் இருந்து UK 1708 விமானம் ஊடாக 35 ஐக்கிய அரபு இராஜ்நியத்தில் இருந்து EK 648 விமானம் ஊடாக 75 பயணிகளும் மற்றும் சிங்கப்பூரில் இருந்து SQ 468 விமானம் ஊடாக 19 பயணிகளும் இன்று வருகைதரவுள்ளனர். வருகை தந்த அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை (8) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 78 தனிமைப்படுத்தல் மையங்களில் 5782 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (7) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 15041 ஆகும். |