கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள படையினரின் நலன் பேணி இராணுவத் தலைமையகத்தில் கிறிஸ்தவ ஆசிர்வாத நிகழ்வு
28th December 2020
இறைவன் உலகிற்கு அளித்த அமைதியான மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில், இலங்கை இராணுவ கிறிஸ்தவ சங்கமானது, இந்த ஆண்டு தனது கிறிஸ்மஸ் நிகழ்வினை இராணுவ தலைமையகத்தில் ஏற்பாடு செய்தது. குறித்த நிகழ்வில் கொழும்பு பேராயர் டொக்டர் மால்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கொவிட் -19 கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள படையினர், அனைத்து உயிர்நீத்த போர்வீரர்கள், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொது மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெய்வீக உதவி, ஆசீர்வாதம் வழங்கும் குறித்த நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதி மற்றும் அவரது துணைவியாரான இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெடென்ன, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன மற்றும் அவர்களது துணைவியர்கள், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமதன்பிட்டிய, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக, இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க, இராணுவ தலைமையகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் கிறிஸ்டியன் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர்.
அங்கு வருகை தந்த கொழும்பு பேராயர் டொக்டர் மால்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் இராணுவத் தளபதி மற்றும் திருமதி சுஜீவ நெல்சன் மற்றும் இலங்கை இராணுவ கிறிஸ்தவ சங்க மற்றும் இராணுவ கிறிஸ்டியன் அலுவலர்கள் சங்க தலைவர் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.
இராணுவ கிறிஸ்தவ சங்க செயலாளர் பிரிகேடியர் மஞ்சுல கருணாரத்ன அவர்களினால் கலந்து கொண்ட அனைவரையும் வாழ்த்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காட்டியுள்ளபடி அன்பு, அரவணைப்பு, பாசம் மற்றும் நித்திய ஆசீர்வாதம் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இந்த சிறப்பு பெனடிகேஷனின் முக்கியத்துவம் குறித்து வரவேற்பு உரை நிகழ்த்தினார். பின்னர் அவர் மரியாதைக்குரிய வகையில் பெனடிகேஷனை நடத்த தனது பேராயரை அழைத்தார்.
இராணுவத் தளபதி, கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், முப்படையினர் உயர் நீத்த படை வீர்ர்கள் ,சேவையிலுள்ள படை வீர்ர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்கள் மீது ஆசிர்வதித்த்தோடு புனித பைபிளின் பொருத்தமான பத்திகளை மேற்கோள் காட்டி நற்செய்தியையும் கிறிஸ்துமஸ் செய்தியையும் வாசித்தார்.
சபையில் பின்னர் இயேசு கிறிஸ்துவுக்கு கூட்டாக பாடல்கள் பாடப்பட்டது மற்றும் அவரது பிறப்பைக் கூறியதுடன், கோவிட் -19 வைரஸை ஒழிக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவ்கள் தனது மனைவியுடன் இணைந்து இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு - நவ ரத்தக்' திட்டத்தின் கீழ் இராணுவத்தால் மேம்படுத்தப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை சந்தியில் இருந்து இராணுவ தலைமையகத்திற்கு செலும் வீதியின் வழிப்பாதையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் அலங்காரங்களை ஆரம்பித்து வைத்தார்.தேவையான சுகாதாரத் தரங்களுக்கு ஏற்ப மக்கள் இந்த அலங்காரங்களை அனுபவிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். |