தியத்தலாவையில் இராணுவத் தளபதியினால் ஸ்குவாஷ் கட்டிடம் திறந்து வைப்பு
19th December 2020
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று மாலை 18 அம் திகதி தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவக் கல்லூரி கட்டிடத் தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்குவாஷ் கட்டிடத்தை திறந்து வைத்ததோடு , படைகளுக்கிடையிளான உள்ளக ஸ்குவாஷ் போட்டியின் பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ ஸ்குவாஷ் குழுவின் தவிசாளர் பிரிகேடியர் பிரதீப் குணவர்தன, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக, இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க, இலங்கை இராணுவக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த குணரத்ன ஆகியோர் இணைந்து வருகை தந்த இராணுவத் தளபதியை வரவேற்றனர்.
முதலில் பிரதம அதிதியவரகள் 17 வது பொறியியலாளர் சேவைப படையணியின் படையினரால் சர்வதேச தரநிலைக்கேற்றவாறு நிர்மாணிக்கப்பட்ட ஸ்குவஸ் கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
வருடத்தின் ஆரம்ப படையணிகளுக்கிடையிலான இராணுவ ஸ்குவாஷ் போட்டியானது பனாகொடை மற்றும் மத்தேகொடை இராணுவ ஸ்குவாஷ் விளையாட்டு முற்றத்தில் நடாத்தப்பட்டதோடு இறுதிப் போட்டியானது தியதடதலாவையில் நடாத்தப்பட்டது. குறித்த போட்டியில் 16 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 100 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
புதிய ஸ்குவாஷ் விளையாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த பிரதம அதிதியவர்கள் முதலாவதாக விளையாட்டினை ஆரம்பிக்கும் முகமாக தான் விளையாடி போட்டியினை ஆரம்பித்து வைத்தார். பின்னர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் போட்டியில் கலந்து கொண்ட வீர வீராங்கனைகளை பாராட்டினார்.
திறப்பு விழாவின் இறுதியில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது நகர்வுகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், எந்தவொரு ஸ்குவாஷ் போட்டி விளையாட்டு வீரருக்கும் எதிராக இராணுவ விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவதற்கான சர்வதேச தரநிலைகள் மேம்படுத்துவதற்காக, இலங்கை இராணுவம் மிகப்பெரிய அமைப்பாக இப்போது 3 ஸ்குவாஷ் விளையாட்டு கட்டிடங்களை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவரது குரல் பதிவு இணைக்கப்பட்டுள்ளது:
2020 போட்டியின் வெற்றியாளர்கள்
திறந்த மகளிர் ஒற்றை சம்பியன்ஷிப் - இலங்கை இராணுவ மகளிர் படையணியை சேர்ந்த கோப்ரல் பண்டார
திறந்த ஆண்கள் ஒற்றை சம்பியன்ஷிப் - இலங்கை இலேசாயுத காலாட் படையணியை சேர்ந்த கோப்ரல் பிரபாத்
திறந்த மகளிர் குழு சம்பியன்ஷிப் - இலங்கை சமிக்ஞை படையணி
திறந்த ஆண்கள் குழு சம்பியன்ஷிப் - கஜபா படையணி |