தனியார் வைத்தியசாலைகள் ஊடாக ஹோட்டல்களில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை-நொப்கோ தலைவர் தெரிவிப்பு

18th December 2020

விசாலமான ஹோட்டல்களை சிகிச்சை நோக்கங்களுக்காக மாற்றிய பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சை பெற விரும்பும் கொவிட் -19 நோயாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா. அவர்கள் இன்று காலை (17) ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் காலை நேர தொலைக்காட்சி நிகழ்ச்சில் வழங்கிய செவ்வியில் தெரிவிக்கையில், சமூகத்தின் சில பிரிவினர் பொதுவான சிகிச்சை முறைகளுக்கு உட்பட தயங்குவதால், அதற்கு பதிலாக பணம் செலுத்தி சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைகளில் சேருவதற்கான சாத்தியக்கூறுகளை நாடுவதாகவும், குறித்த காரணத்தினால் தனியார் வைத்தியசாலைகளின் உதவியை நாடுவதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கொவிட்-19 நோயாளிகள் அதிகரித்ததை அடுத்து மாற்று நடவடிக்கைகளாக நாட்டின் சில வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக முப்படையினரால் தனிமைப்படுத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களை வைத்தியசாலைகள் அல்லது சிகிச்சை மையங்களாக மாற்றியுள்ளோம். இன்று, இலங்கையில் 8,000 க்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகளில், கிட்டத்தட்ட 65 சதவீத நோயாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நடத்தப்பட்ட இடைநிலை சிகிச்சை மையங்களில் உள்ளனர்.

இருப்பினும், சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள். அரச வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகள் போன்றவை குறைவாக காணப்படுவதால் அங்கு தங்க அவர்கள் விரும்புவதில்லை, அதற்கு பதிலாக அவர்கள் பிரத்தியேக அறை வசதிகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள்.ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், இது தொடர்பாக நாங்கள் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். நானும் சுகாதார அமைச்சரும் கடந்த வாரம் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம். கொழும்பின் முக்கிய தனியார் வைத்தியசாலைகளுடன் பேசினோம். அதன்படி, நவலோக வைத்தியசாலை மற்றும் லங்கா வைத்தியசாலை ஆகியவை இந்த நோக்கத்திற்காக ஹோட்டல்களை வாடகைக்கு விடுவதன் மூலம் இதைச் செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதன்படி, ஒரு ஹோட்டலை சரியான முறையில் வைத்தியசாலையாக மாற்றவும், அதை ஒரு சிகிச்சை மையமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அறிகுறியற்ற நோயாளிகளுக்கு இது ஒரு வைத்தியசாலையாக மாற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகள் அவசரமாக செயற்படும் வண்ணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அக்கரைப்பத்து பிரதேசம்

அக்கரைப்பத்து-5

அக்கரைப்பத்து-14

மாநகரசபை பிரிவு-03

அட்டாளச்சேனை பொலிஸ் பிரிவு

பாலமுனை

ஒலுவில்-2

அட்டாளச்சேனை 08

ஆலயடிவேம்பு பொலிஸ் பிரிவு

ஆலயடிவேம்பு - 8/1

ஆலயடிவேம்பு - 8/3

ஆலயடிவேம்பு- 9

அதேவேளை மொனராகல மாவட்டத்திலுள்ள அலபொத கிராம சேவகர் பிரிவு மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். அவரினால் வழங்கப்பட்ட ஊடக செவ்வி பின்வருமாறு |