ஜனாதிபதி செயலகத்தின் நிதியில் வன்னி படையினரால் ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணம்

3rd December 2020

சூறாவளி அவசரநிலை ஏற்பட்டால் அவசர தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான படையினரின் தயார் நிலை குறித்து பரீட்சிப்தற்காக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (2) வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூரவ விஜயத்தை மேற்கொண்டார். குறித்த விஜயத்தினை மேற்கொண்ட அவர் அதே நாள் மாலை வன்னி பிராந்தியத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகத்தின் இணை நிதியுதவியின் மூலம் இராணுவத்தால் ஏழைக் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை திறந்து வைத்தார்.

இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், 62 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 621 ஆவது பிரிகேட படைப் பிரிவின் 14 ஆவது இலங்கை பீரங்கி படையினரின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சிவில் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் உள்ள ஒத்துழைப்பினை மேன் மேலும் மேம்படுத்திக்கொள்வதாகும்.

இன்றுவரை வன்னியில் உள்ள படையினர் நன்கொடையாளர்கள், இலங்கை வெளிநாட்டவர்கள், உள்ளூர் வர்த்தகர்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடை முகவர்கள் ஆகியோரின் அனுசரணையின் மூலம் பெரும்பாலும் சிரேஷ்ட அதிகாரிகளின் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குறைந்த வருமானத்தில் வாழும் 654 குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் நிர்மானித்து கொடுத்துள்ளனர்.

பயனாளியான முனினுரிப்பு பிரதேசத்தில் வசிக்கும் திருமதி எம். சுஹந்தனி அவர்களின் கஷ்ட நிலைமையினை அறிந்து கொண்ட பின்னர், இந்த கட்டுமானப் பணிகளானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிர்மானிக்கப்பட்டது.

புதிய வீடானது பிரதம அதிதியான இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இந்து கலாச்சார முறைகளுக்கு ஏற்ப திறந்து வைக்கப்பட்டது. மத ஆசீர்வாதங்களுக்குப் பிறகு, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ரிபன் வெட்டி வீட்டை திறந்துவைத்ததுடன் பயனாளிக்கு வீட்டின் திறப்பை வழங்கினார். அதே சந்தர்ப்பத்தில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி அவருக்கு ஒரு புதிய குளிர்சாதன பெட்டி மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினர்.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர், வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 62 ஆவது படைப் பிரிவு படைத் தளபதி, 621 ஆவது பிரிகேட் படைப்பிரிவு தளபதி, 14 ஆவது இலங்கை பீரங்கி படையிணியின் கட்டளை அதிகாரி மற்றும் வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட ஏனைய இராணுவச சிப்பாயினரும் கலந்து கொண்டனர். |