‘துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மினி மினி டிராக்டர்கள் வழங்கல்
20th October 2020
அனைத்து இராணுவ படைப் பிரிவுகளுக்கிடையேயும் ,அருகிலுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளிடையேயும் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இராணுவத் தளபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட 'துரு மிதுரு நவரட்டக்' திட்டத்கமைய,தொடர் விவசாய நிகழ்ச்சித் திட்டமானது தியதலாவையில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தில் சனிக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான அனுசரணையானது அன்மையில் கொமர்ஷல் வங்கியினால் இராணுவ தலைமையகத்திற்கு வழங்கப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் 6 மாவட்டங்களில் உள்ள தொலைதூர பகுதி விவசாயிகளை உள்ளடக்கும் திட்டத்தில், இரண்டு கை டிராக்டர்கள், இரண்டு மினி சாகுபடி டிராக்டர்கள், விவசாய உதிரி பாகங்கள், தெளிப்பு இயந்திரங்கள், நீர் விசையியக்கக் குழாய்கள், விதைகள் போன்றவை வேளாண்மை மற்றும் கால்நடைகள் பணிப்பகத்தினூடாக குறித்த நிகழ்வின் பிரதம அதிதியான மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்திகொஸ்தா அவர்களினால் விநியோகிக்கப்பட்டன. குறித்த இயந்திரங்கள் மற்றும் ஏனையவற்றின் மொத்த பெறுமதி ரூ .5 மில்லியனுக்கும் மேலானவையாகும்.இந்த நிகழ்வில் குறித்த டிராக்டர்களை பகிர்வு அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய ஆறு மாவட்டங்களில் உள்ள 104 விவசாயிகளின் பிரதிநிதிகள் கலந்து அவைகளை பெற்றுக்கொண்டனர்.
அதே நிகழ்வில் , 'விவசாய போட்டிகளில்' வெற்றிபெற்ற மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ பட்டாலியன்கள், பயிற்சி பாடசாலைகள் மற்றும் படையணிகளுக்கு விதைகள், விவசாய பாகங்கள் போன்றன வழங்கப்பட்டன. அதற்கு கூடுதலாக. தியத்தலாவை இராணுவ பண்ணைக்கு இரண்டு மினி டிராக்டர்கள் வழங்கப்பட்டன. அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த இராணுவ அதிகாரிகள் தங்கள் விருதுகளை அன்றைய பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
இராணுவத் தளபதியால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் 'துரு மிதுரு நவ ரட்டக்' திட்டத்தின் பயிர் செய்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றுமபிரதேச அழகுபடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளால் சில வாரங்களுக்கு ஈர்க்கப்பட்ட கொமர்ஷல் வங்கி, கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தது இராணுவத்தின் மத்தியில் விநியோகிப்பதற்காகவும் மற்றும் குறித்த இயந்திரங்களை வாங்க முடியாத அருகிலுள்ள விவசாய சமூகங்களுக்கும் உதவும் முகமாக கை மினி டிராக்டர்களை வழங்கினர்.
அருகில் உள்ள விவசாய சமூகங்கள் குறித்த இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதில் சிரமத்தினை எதிர்நோக்குவதனையிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் சௌபாக்ய தெக்ம' கொள்கைக்கு அமைய அவர்களுக்கு பயிர்செய்வதற்கான ஏதாவது ஒரு சாத்தியமான ஒத்துழைப்பினை வழங்குமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ பிரிவுகளுக்கும் இராணுவத் தளபதியவர்கள் அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதிகள், பிரிகேட் படைத் தலைமையகம், பயிற்சி பாடசாலைகள் மற்றும் ஏனைய படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். |