இராணுவ தினத்தை முன்னிட்டு ஆசிர்வாத பீரித் பாராயண நிகழ்வு மற்றும் தானம் வழங்கல்

4th October 2020

இராணுவ தினம் (அக்டோபர் 10) தினத்தை முன்னிட்டு இராணுவ பௌத்த சங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் பௌத்த மத வழிப்பாடான முழு இரவும் பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வானது 01 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்றது. அடுத்த தினம் (2) 71 பௌத்த தேரர்களுக்கு காலை அன்னதானம் மற்றும் மதிய தானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா,சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன், பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, இராணுவ தலைமையகத்தின் பிரதான பதவி நிலை பிரதானிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் அவர் தம் துணைவியர் மற்றும் படையினர் பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின் முதல் கட்டமாக இராணுவ கலாசாரக் குழுவினரின் நடனக் கலைஞர்களின் வண்ணமயமான ஊர்வலமாக பௌத்த துறவிகள் பிரதான பிரித் மண்டபத்திற்கு அழைத்துச் வரப்பட்டனர். பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பௌத்த சம்பிரதாய மரபுகளுக்கு ஏற்ப கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகி தர்ம மகா சங்க சபையின் பிரதி தலைவர் வணக்கத்திற்குறிய கலாநிதி கொட்டபிட்டிய ராகுல தேரர் மற்றும் பிட்டிபன புராதண விகாரையின் தலைமை தேரர் ஹோமாகம ஷீலவன்ஷ தேரர் ஆகியோருக்கு தாம்பூலம் வழங்கி (Dehetwattiya), அடுத்த நாள் காலை (2) வரை பிரித் பாராயணத்திற்காக அழைப்பித்தார்.

மகா சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பாக தலைமை தேரர் ஆசீர்வாத சொற்பொழிவு ஆற்றி அமைப்புக்கு ஆசீர்வாதம் அளித்தார். மேலும் போரினால் காயமடைந்த மற்றும் மறைந்த வீரர்களின் கடந்த கால வரலாற்றையும் நினைவு கூர்ந்தார். அவர் இராணுவத்தின் பண்முகப்படுத்தப்பட்ட பாத்திரங்களைப் பாராட்டினார். தேசத்தின் பாதுகாவலர்களாக முன்னோக்கி அணிவகுத்துச் செல்வதற்கான தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இராணுவத்தின் சகல நிலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் பங்குபற்றிருந்தனர். மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் இராணுவ பௌத்த சங்கத் தலைவருமான மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க மற்றும்செயற்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் படையினர் இப்புண்ணிய கருமத்தில் பங்கேற்றனர். |