முதல்பெண்மணி தலைமையில் சிறுவர் தினக் கொண்டாட்டம்.

3rd October 2020

விசேட தேவைகளைக் கொண்ட இராணுவக் குடும்பங்களின் குழந்தைகளுக்காக மெனிங் நகரில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தில் (SERRIC) வியாழக்கிழமை 1ம் திகதி உலக சிறுவர் தினம் தினம் கொண்டாடப்பட்டது. பிரதம அதிதியாக முதல் பெண்மணி திருமதி அனோமா ராஜபக்ஷ கலந்துக் கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ், திருமதி சுஜீவா நெல்சன், திருமதி சந்திமா உலுகேதென்ன , திருமதி. பிரபாவி டயஸ் மற்றும் பெற்றோர் பங்குகொண்டனர்.

செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் விசேட தேவையுடைய குழந்தைகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இராணுவ குடும்பங்களுக்கான ஒரே நிலையமாகும். இது குழந்தை வளர்ச்சிக்கான அறிவைபெறல், ஆராய்ச்சி மற்றும் தகவல் மையமாகவும் செயல்படுகிறது. திருமதி சோனியா கோட்டேகொட இதன் தலைமை மேற்பார்வை அதிகாரியாக செயல்படுகின்றார்.

அன்றைய பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு அதிதிகளை சில சிறுவர்கள் முப்படையினரின் சீருடை அணிந்து பூச்செண்டுகளை வழங்கி வரவேற்றனர். பின்னர் அந்த சிறுவர்களுக்கு அவர்களின் அழகியல் திறன்களை விருந்தினர்கள் முன்னிலையில் வெளிக் காட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கான பயிற்சித் திட்டமானது சிறுவர் மேம்பாட்டு நிபுணர்களினால் சிறுவர் பராமரிப்பு மைய சேவையாக வழங்கப்படுகின்றது.

பிரதம அதிதி மற்றும் சிறப்பு அதிதிகளுக்கு செனஹச பற்றிய சிறப்பு ஆவணப்படம் காட்டப்பட்டது. கலை நிகழ்விற்கு முன்பதாக செல்வி தருஷி வரவேற்புரை நிகழ்த்தினார். அதேவேளையில் மையத்தின் வலைத்தளம் பிரதம அதிதியினால் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவம்சமாக செல்வன் மன்மித நன்றி உரையினையும் நிலையத்தின் தளபதி பிரிகேடியர் ராஜா குணசேகர நிறைவுரையினையும் வழங்கினர்.

அன்றைய நிகழ்வில் திருமதி அயோமா ராஜபக்ஷ ஒவ்வொரு சிறுவர்களிடன் சுதந்திரமாக உரையாடி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவருக்கும் பரிசு பொதியை வழங்கினார். அனைத்து செனஹச சிறுவர்களும் திரு லஹிரு பெரேராவுடன் பாடல் பாடும் வாய்ப்பை பெற்றனர். பிரதம அதிதியுடன் ஒரு குழு புகைப் படத்தினையையும் எடுத்துக் கொண்டனர். ஞாபகார்த்தமாக வளாகத்தில் முதல் பெண்மணி மாமரக் கன்றினையும் நாட்டினார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன, மேலதிக செயலாளர் (பாதுகாப்பு), மேலதிக செயலாளர் நிதி அமைச்சு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், முப்படைத் தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் அவர்களது பாரியார்கள், ரணவீரு சேவா அதிகாரச் சபையின் தலைவர் மற்றும் அவரது பாரியார், நிபுணர்கள் மற்றும் வளவாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். |